149வது பொலிஸ் தினம் மட்டு.மாவட்ட பிரதான வைபவம்!

ஜவ்பர்கான்

 

149வது பொலிஸ் தினம் இன்று மட்டக்களப்பில் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டது.மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனை வளாகத்தில் இடம்பெற்றது.

S2590017_Fotor

மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் யூ.கே.திசாநாயக்கா தலைமையில் வைபவம் இடமபெற்றது.உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.தங்கேஸ்வரி சர்வமத தலைவர்கள் உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

S2590012_Fotor

மாவட்டசிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்கு முன்னால் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றதுடன் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோனின் பொலிஸ் தின செய்தியும் வாசிக்கப்பட்டது.

S2590011_Fotor S2590016_Fotor