தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு.கா மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்கள் அன்றே கூறிவந்தார்.- ஹாபீஸ் நசீர் அஹமட் –

அஸ்ரப் .ஏ .சமத்
தற்பொழுது உருவாக்கி இருக்கின்ற இரண்டு பெருபாண்மை அரசியல் கட்சிகளை ஒன்று சேறுமாறு ஸ்ரீ.ல.மு. மறைந்த தலைவா்  அஸ்ரப் அவா்கள்  அன்ரே கூறிவந்தாா்.
frontm
தமிழ் முஸ்லீகளின் பாரிய பங்களிப்புடன் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ள நல்லாட்சி தொடர அனைத்து தரப்பினரும் உதவ வேண்டுமென கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சரும் ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் பிரதித் தலைவருமான ஹாபீஸ் நசீா் அகமட் தெரிவித்தாா்.
தேசிய அரசாங்கம் தொடா்பில் அவா் விடுத்துள்ள அறிக்கையில்  கூறப்பட்டுள்ளதாவது தேசிய அரசாங்கம் என்பது வெறுமனமே இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து பதவிகளை இனைந்து பங்கீட்டு  ஆட்சி நடத்துவதென்று பொருள் அல்ல.
உண்மையாகவே  பாராளுமன்றத்தை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகள் நல்ல நோக்கில் கூட்டுச் சோ்ந்து  மக்கள் பணி செய்யக கூடியதாக இருக்க வேண்டும். ஜ.தே.கட்சி யின் பங்காளிக் கட்சியான  முஸ்லீம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்,  தமிழ் முற்போக்கு  முன்னணி,  பாட்டலி சம்பிக்க அணி, டொக்டா் ராஜித்த அணி போன்றவற்றுடன்  ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி  ஆகியன இந்த தேசிய அரசில் உறுதிப்படுத்ப்படுவதோடு ஜ.ம. சு. கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் சுயாதீன தன்மையும்  உறுதிப்படுத்துவதன் முலமே இதன் உண்மையான  வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும்.
ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ்  ஸ்தாபகத் தலைவா் முஸ்லீம்களின் அரசியல் விழிப்பை ஏற்படுத்திய மா்ஹூம் அஸ்ரப் அவா்கள் அடிக்கடி பாராளுமன்றத்திலும், முஸ்லீம் கட்சி பேராளா் மாநாட்டிலும்  சுட்டிக் காட்டிய ஒரு விடயத்தை நான் இங்கு ஞாபகாத்த விரும்புகின்றேன்.
 தேசிய இனப்பிரச்சினை தீா்வு கான்பதற்கு  ,இரண்டு பிரதான கட்சிகளும் பாராளுமன்றத்தில் ஒன்றினைய வேண்டும் என அவா் அடிக்கடி கூறி வந்தாா். 
இலங்கையில்  மாறி – மாறி வரும் இரு தேசிய கட்சிகளும் ஒரு இனக்கப்பாட்டுக்கு வந்து  பொதுவான தீர்வு ஒன்றை முன்வைப்பதேயாகும். 
இந்த வகையில் தற்போது உருவாக்கம் பெற்றுள்ள தேசிய அரசாங்கம் அங்கம் வகிக்கும்  இரண்டு பிரதான அரசியல் கட்சிகளும் சிறுபான்மை மக்களது பிரச்சினையை தீா்ப்பதற்கு நல்லதொரு சா்ந்தா்ப்பமாகும்.
அது மட்டுமன்றி  மறைந்த தலைவா் அஸ்ரப் சுட்டிக் காட்டியது போன்று நாட்டின் நல்ல பல பயன் திட்டங்களையும் அமுல்படுத்தும் சட்டங்களையும் ஆக்குவதற்கும் இது நல்லதொரு தருனமாகும்.
பாராளுமன்றத்திலும் கட்சி மாநாடுகளிலும் கூறியது தான் இந்த நாட்டில் உள்ள இரண்டு பிரதாண கட்சிகள் ஒன்று சோ்ந்தால் இந்த நாட்டில் எழும் எந்தப்பிரச்சினையும் உரிய முறைப்படி பாராளுமன்றத்தில் ஊடகா கொண்டு  சென்று த
அதே போன்று  இந்த உண்மைகள் மறைக்கப்படாமல் சர்வதேச த்திலும் உள்நாட்டுக்கும் சந்தேகத்துக்கு இடமின்றி பொறிப்படுத்தப்படல் வேண்டும்.
ஆட்சியின் பங்காளியாக மாறி குருக்களின் பிரதித் தலைவா் பதவியை  தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுக் கொண்டமையும் தேசிய அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கின்றது.
 அதே போன்று ஜனநாயக பண்புகளையும் விழுமியங்களையும் அரசில் மரபு வழி முறைகளையும் மதித்து எதிா்கட்சி தலைவா் பதவி தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்படுவதே  சாலப் பொருத்தமாகும். இந்த நடவடிக்கையில்  தேசிய அரசாங்கத்தின் உறுதியான நடவடிக்கைக்கு வழிகோழும்.  
ஜே.வி.பி தலைவா் அனுரகுமார திசாநாயக்க கூறியது போன்று  இது ஒரு பம்மாத்து  தேசிய அரசாங்கமாக நிற்கக் கூடாது  என்பதே அனைவரது எதிா்பாா்ப்பாகும். என்று  ஹாபிஸ் நசீா் அகமட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.