கிழக்கு மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்க அதிபர்களுக்கு முதலமைச்சர் உத்தரவு..!

அபு அலா –

கிழக்கு மாகாணத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் வரட்சி நிலமையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை உடனடியாக சந்தித்து அவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு இன்று (1) கடிதம் மூலம் அறிவித்தல் விடுத்து உத்தரவிட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

naseer
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தற்போது நிலவிவரும் வரட்சியினால் அதிகளவான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிழக்கு மாகாண பொதுமக்கள் பல கஷ்டங்களையும், துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர் என்றும், இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் கஷ்டங்களை போக்கும் முகமாகவே இந்த துரித நடவடிக்கையினை மேற்கொண்டு மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு கடிதம் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  அறிவித்தல் விடுத்து கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பிரதேச செயலகப்பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மூலம் வரட்சியால் பாதிக்கப்பட்டகுடும்பங்களின் தரவுகளைத் திரட்டி உடனடியாக கிழக்கு மாகாண முதலமைச்சுக் காரியாலத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பள்ளது என்றும் தெரிவித்தார்.