மட்டு.மாவட்ட வாவி மீனவர்கள் தொழிலின்றி அவதி—வாவியில் படரும் தாவரத்தினால் நோய்களுக்கு ஆளாகும் துயரம்!

ஜவ்பர்கான்

 

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவி மட்டக்களப்பு வாவியாகும்.இதனை நம்பி சுமார் 13 ஆயிரம் மீனவ குடும்பங்கள் ஜீவனோபாயத்திற்காக காத்திருக்கின்றனர்.

 

இயற்கை எழில் நிறைந்த பாடும் ; மீன்கள் வாழும் வாவி என உலகப் புகழ்பெற்ற இவ்வாவியில் கடந்த இருமாதங்களாக படர்ந்துவரும் ஆற்று வாழை எனும் ஒரு வகை தாவரத்தினால் மீனவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

DSC04122_Fotor

குறித்த தாவரங்கள் மிக அதிகமாக வாவியினுள் படர்வதால் வலைகளை பிய்த்து வவதாகவும் மீனவர்கள் தோல் நோய்களுக்கு ஆளாவதாகவும் தோணிகளை வாவியினுள் செலுத்த முடியாதுள்ளதாகவும் குற்றம் சாட்டும் இவர்கள் முதலைக்கடிக்கு ஆளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.

DSC04129_Fotor

 

இம்மாவட்டத்தின் வாவி மீனவர்கள் இவ் ஆற்று வாழை தொல்லையினால் தொழிலையே கைவிட்டு வேறு தொழில்களை நாடிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

 

எனவே குறித்த தாவரங்களை வாவியிலிருந்து அகற்றி தருமாறு கடற்றொழில் திணைக்களத்தை மீனவர்கள் கோரி நிற்கின்றனர்.