வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை…!

images

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாப் பத்திரங்களை திருத்தும் பணி செப்டம்பர் 9 முதல் 14ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது. 38 பாடசாலைகளில் இப்பணி இடம்பெறவுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. 

கடந்த 24ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியிலுள்ள 2907 நிலையங்களில் நடைபெற்ற தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு மொத்தம் 3 இலட்சத்து 40 ஆயிரத்தி 926 மாணவர்கள் தோற்றியிருந்தனர். 

இதேவேளை, தற்போது நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை வினாப்பத்திரங்களை திருத்தும் பணிகள் செப்டம்பர் 12ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை 23 பாடசாலைகளில் இடம்பெறவுள்ளன. இப்பணிகள் 8 பாடசாலைகளில் முழுமையாகவும், 15 பாடசாலைகளில் பகுதியளவிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பாராளுமன்ற பொதுத் தேர்தலையொட்டி இருகட்டங்களாக நடைபெறும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை செப்டம்பர் 08ம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. ஆகஸ்ட் 4ம் திகதி ஆரம்பமாகி 17ம் திகதிய பொதுத் தேர்தலுக்காக கடந்த 13ம் திகதி நிறுத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைசையின் இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 24ம் திகதி திங்கட்;கிழமை ஆரம்பமாகியது. ஆகஸ்ட் 14 முதல் 23ம் திகதி வரையான காலப் பகுதியில் உயர்தரப்பரீட்சை நடைபெறவில்லை. இதுகுறித்து முன்கூட்டியே பரீட்சார்த்திகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்முறை, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 9 ஆயிரத்தி 69 பேர் தேற்றிவருகின்றனர். இவர்களில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 72 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், 72 ஆயிரத்து 997 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குவர். இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள 2180 பரீட்சை நிலையங்களில் பரீட்சைக்;கு தோற்;றிவருகின்றனர்.