பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து ஓய்வு!

எம்.ஏ. தாஜகான்

பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் அஸிஸ் தனது அரச சேவையில் இருந்து 2015.08.21 இல் ஓய்வு பெற்றார். இவர் பொத்துவில் கல்வி அபிவிருத்தி, கல்விப்பணிகளில் சிறந்த முகாமைத்துவ சேவைகளைப் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

DSCF4038_Fotor

தனது ஆரம்பக்கல்வியினை பொத்துவில் மெதடிஸ்தமிஸன் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்று சாதாரண தரத்தினை பொத்துவில் மகாவித்தியாலயத்திலும், உயர்தரத்தில் கல்முனை சாஹிராக்கல்லூரியிலும் கற்று தனது பட்டப்படிப்பினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1978-1982 வரை கல்விமாணி பட்டத்தை மேற்கொண்டார். 

பொத்துவிலின் முதலாவது கல்விமாணி(B.Ed) இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் பல பகுதிகளிலும் சிறந்த கல்விச் சேவையினை வழங்கியவர். அந்தவகையில் பஸ்ஸர தமிழ் மகாவித்தியாலயத்தில் 1984.08.05-1989.11.09 , பொத்துவில் மகாவித்தியாலயத்தில் 1989.-1991 வரையிலும் ஆசிரியராக கடமையாற்றினார்.

அதன்பின்னர் ஆசிரியர் பயிற்சியாளர்களின் சிரேஸ்ட போதனாசிரியராக 1991-1994 வரை கடமையாற்றி அதன்பின்னர் பொத்துவில் மத்திய கல்லூரியில் 1994 அதிபராக கடமையேற்றார். மேலும் அதிபர் பதவியின் சிறந்த சேவையினை வழங்குவதற்காக பொத்துவில் அல் இஸ்ராக் வித்தியாலயம், அல் முனவ்வறா வித்தியாலயம், பொத்துவில் அல் இர்பான் பெண்கள் கல்லூரியிலும் சேவையாற்றினார். 

பொத்துவில் அல் இர்பான் மகளிர் கல்லூரியின் பௌதிக வளம், கல்வி மேம்பாட்டு நிகழ்வுகளில் முன்னின்று செயற்பட்டிருக்கும் பொழுது பொத்துவிலின் கோட்டக்கல்விப்பணிப்பாளராக 2011.10.25 கடமையேற்று 2014.09.11 சிறந்த சேவையாற்றினார். 

சேவை மூப்பு திறமை அடிப்படையில் 2011.06.11 இலங்கை கல்வி நிர்வாக சேவையினுள் உள்வாங்கப்பட்டார். அதன்பின்னர் பொத்துவில் உபவலயக்கல்விப்பணிப்பாளராக பதவியேற்று 2014.09.12-2015.08.21 வரை உபவலயக்கல்வி அலுவலகத்தின் கல்வி நிர்வாகம், மற்றும் கல்வி அபிவிருத்தி செயற்பாடுகளில் கூடிய பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சிறந்த நிர்வாகம், முகாமைத்துவ ஆலோசனை,வளங்களை அடையாளம் காணல் போன்ற திறன் கொண்ட இவர் பொத்துவில் உபவலயத்தில் நடைபெறுகின்ற இணைப்பாடவிதான செயற்பாட்டு போட்டிகளில் முன்னின்று செயற்பட்டவர் .இவருடைய காலத்தில் பொத்துவில் பாடசாலை மாணவர்கள் மாகாணம், தேசிய மட்டங்களில் திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்கள் .