விஷ்வா வர்ணபால, துமிந்த திசாநாயக்க தாக்கல் செய்த வழக்கு மீளப்பெறப்பட்டது !

Duminda-Wishwa 

 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர்களாக இடையூறின்றி செயற்படுவதற்கு இடமளிக்குமாறு கோரி பேராசிரியர் விஷ்வா வர்ணபால மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு இன்று மீளப் பெறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் சுசில் பிரேமஜயந்த மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோருக்கு ஏற்கனவே தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

சுசில் பிரேமஜயந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளதால், விஸ்வா வர்ணபால மற்றும் துமிந்த திசாநாயக்க ஆகியோர் இடையூறின்றி பொது செயலாளர்களாக தொடர்ந்தும் செயற்பட முடியுமென சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த வழக்கில் பேராசிரியர் விஷ்வா வர்ணபால சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே. கனகீஸ்வரன் மற்றும் சந்தக்க ஜயசுந்தர உட்பட சட்டத்தரணிகள் குழுவொன்று ஆஜராகியிருந்தது.