வீழ்ந்து எழுந்த உசைன் போல்ட் ! (வீடியோ )

https://www.youtube.com/watch?v=NS79ZDPHcrY

உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆண்களுக்கான 200 மீட்டர் தூர ஓட்ட பந்தயம் இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் உசைன் போல்ட், காட்லின் உள்ளிட்ட 9 பேர் கலந்து கொண்டனர்.

 

epa_china_iaaf_athletics_world_championships_beiji_75409474

 

இந்த போட்டியில் உசைன் போல்டுக்கு காட்லின் கடும் சவாலாக இருப்பார் என்று கருதப்பட்டது. இருந்தாலும், போல்ட் காட்லினை பின் தள்ளி தங்க பதக்கம் வென்றார். உசைன் போல்ட் பந்தய தூரத்தை 19.55 வினாடிகளில் கடந்தார். காட்லின் 19.74 வினாடிகளில் கடந்து 2 ஆவது இடத்தையும், தென்ஆபிரிக்க வீரர் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

போட்டியில் வெற்றி பெற்ற சந்தோஷத்தில் ரசிகர்களிடம் தனது மகிழ்ச்சியை உசைன் போல்ட் கையசைத்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அவருக்குப்பின்னால் கேமராமேன் ஒருவர் தானியங்கி இரு சக்கர வண்டியில் (Segway-Riding) சென்றுகொண்டு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்து உசைன் போல்ட் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த உசைன் போல்ட் பின்புறமாக கீழே விழுந்தார்.

இதனால் மைதானத்தில் இருந்தவர்கள் சற்று அதிர்ந்து போனார்கள். ஆனால், உசைன் போல்ட் சுதாகரித்துக்கொண்டு சட்டென எழுந்து எந்த வித முகபாவனைகளையும் காட்டாமல் வழக்கமான பாணியில் தனது மகிழ்ச்சியை தெரிவித்தவாறு சென்றார்.