இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனுக்கு விளக்கவுரை சொன்ன முதலாவது விரிவுரையாளர் முகம்மது நபி (ஸல்)அவர்கள்தான் ;சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்செய்க எம்.எஸ்.எம்.ஜலால்தீன்.

பி.எம்.எம்.ஏ.காதர்

 

உலகத்திலே இருக்கக் கூடிய எல்லா அறிவுகளும், கலைகளும் புனித குர்ஆனிலேதான் இருக்கின்றது என தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் சிரேஸ்ட விரிவுரையாளருமான அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் தெரிவித்தார்.

2-MSM JALAL DEEN-LEC-24-08-2015

 

அக்குறுனையைச் சேர்ந்த உஸ்தாத் மன்சூர் எழுதிய குர்ஆனிய சிந்தனை தப்ஸீர் நூல் அறிமுக நிகழ்வு தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் ஏற்பாட்டில்; அண்மையில்(12-08-2015)பீடத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது இங்கு நூல் விமர்சன உரையாற்றிய போதே அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ்செய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த அறிமுக நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாசிம் கலந்து கொண்டார்.
இங்கு சிரேஸ்ட விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:-குர்ஆனுடைய விளக்கவுரையை அல்லாஹூவைத் தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள் என்று அல்லாஹூதாலா குர்ஆனிலே கூறியிருக்கின்றான்.
எனவே எல்லா அறிவுகளும்,கலைகளும் குர்ஆனில் இருந்துதான் வந்திருக்கின்றது அநேகமாக எல்லா விடையங்களும் குர்ஆனின் பின்புலத்தில் இருந்துதான் வந்திருக்கின்றது.குர்ஆனில் விஞ்ஞானம் இருக்கின்றது.மருத்துவம் இருக்கின்றது விவசாயம் இருக்கின்றது பொருளியல் இருக்கின்றது கலைகள் அனைத்தும் இருக்கின்றது.

 

இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனுக்கு விளக்கவுரை சொன்ன முதலாவது விரிவுரையாளர் முகம்மது நபி (ஸல்)அவர்கள்தான.; அதன் பின்னர் எத்தனையோ பேர் குர்ஆன் பற்றி விரிவுரைகளும் விளக்கவுரைகளும் இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன அந்த வரிசையிலே உஸ்தாத் மன்சூர் அவர்களும் குர்ஆனிய சிந்தனை என்ற தப்ஸீர் நூலைத் தந்திருக்கின்றார்கள் பயனுள்ள இந்த நூலை எல்லோரும் வாசிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

இங்கு நூலாசிரியர் உஸ்தாத் மன்சூருக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட உப வேந்தர் எம்.எம்.எம்.நாசிம் நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.நூலாசிரியர் உஸ்தாத் மன்சூர் உப வேந்தர் எம்.எம்.எம்.நாசிமுக்கு நூ}லின் பிரதியை வழங்கினார். அஷ்செய்க் எம்.எம்.ஹபீப் முகம்மட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

 

 

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைத் துறைத் தலைவர் எம்.எச்.எம்.நைறூஸ்,அறபு கற்கைத் தலைவர் எம்.எச்.முனாஸ் ஆகியோருடன் ஏனைய பீடங்களின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் மாணவர்கள் உள்ளீட்ட பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்;.