சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற அணியின் தலைவர் அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை கையளித்தார் !

ஜவ்பர்கான்

 

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணக் கிரிக்கட் போட்டியில் வெற்றிபெற்ற மாவட்ட செலயக அணியின் தலைவர் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சனால் மாவட்ட அரசாங்க அதிபரிடம் உத்தியோக பூர்வமாக கிண்ணத்தினை நேற்று; (26) மாலை கையளித்தது.

 

மாவட்ட செலயகத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில், மேலதிக அரசாங்க அதிபர்களான எஸ்.கிரிதரன், திருமதி ஜே. திருச்செல்வம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணம் 2015 சுற்றுப் போட்டியில் மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களின் அணி மற்றும் மாவட்ட செயலக அணியும் பங்கு கொண்டன.

 

கடந்த 7ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரையில் நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் மாவட்ட செலயக அணி சம்பியனாகத் தெரிவானது.
இறுதிப்போட்டிக்கு களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணியும், மாவட்ட செயலக அணியும் தெரிவாகின. இதில் மாவட்ட செயலக அணி முதலில் துடுப்பெடுத்தாடி 102 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக அணி நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 80 ஓட்டங்களையே பெற்றுக் கொண்டது.
அந்த வகையில் 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மாவட்ட செயலக அணி மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ணத்தைத் தன்வசமாக்கிக் கொண்டது.

DSC_0004_Fotor

 

3ஆவது இடத்தினை ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு பெற்றுக் கொண்டது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி.எஸ்.எம்.சார்ள்ஸ், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இரண்டாவது வருடமாக நடத்தப்பட்டிருந்தது.

 

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் சவால் கிண்ண கிரிக்கட் சுற்றுப்போட்டி அரச உத்தியோகத்தர்களிடையே ஒருங்கிணைப்பையும் அவர்களது விளையாட்டுத்திறமைகளையும் வெளிக் கொணரும் வகையில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.