வாக்களித்த யாழ் முஸ்லீம்களுக்கு நன்றிகள் !

அஸ்ரப் ஏ சமத்

யாழ்ப்பாணத்தில் வாழும் முஸ்லீம்கள் 1560 வாக்குகளே அங்கு பதியப்பட்டுள்ளன. ஏனையோர் புத்தளம் கொழும்பு பகுதிகளிலேயே வாழ்கின்றனர். இந்த வாக்குளில்; 1447 வாக்குகள் முன்னாள் பிரதியமைச்சரும் தற்பொழுது யாழில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரளுமன்ற உறுபப்பிருமான விஜயகலா மகேஸ்வரனுக்கு அளித்துள்ளார்கள். என யாழ்ப்பாணத்தில் ஜ. தே.கட்சி சார்பாக மகேஸ்ரனுடன் போட்டியிட்ட முஸ்லீம் வேட்பாளர் எம். எஸ் ரஹீம் தெரிவித்தார்.

 

அன்மையில் யாழ் முஸ்லீம்கள் திருமதி மகேஸ்வரனுக்கு வாக்களித்தாதவும் அவர் அங்குள்ள முஸ்லீம்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என விசமத்தனமான செயதியை சில காழ்ப்புணர்ச்சிகொண்ட சிலர் ஊடகங்களில் தெரிவித்தனர். அவ்வாறு இல்லை.தேர்தல் முடிந்து அடுத்த நாளே நாங்கள் விஜயகலாவின் வீட்டுக்கு சென்றறோம். அவர் அன்று கச்சேரியில் நித்திரையின்மையால் மிகவும் கலைப்பாக நித்திரையில் இருந்ததார் நாங்கள் அவரின் செயலாளர் கதை;துவிட்டு வந்தோம். உடன் நாங்கள் கொழுமபு; வர இருந்தால் உடன் கொழும்பு வந்துவிட்டோம. விஜயகலாவும் அடுத்த நாள் கொழும்பு வந்திருந்தார்.
அதன் பின் விஜயகலா என்னைத் தொடர்பு கொண்டு யாழ் முஸ்லீம்களுக்கு நன்றி தெரிவித்தார். யாழில் வாழும் முஸ்லீம்கள் 95 வீதமானவர்கள் ஜ.தே.கட்சிக்கும் தனக்கும் விருப்பு வாக்களித்திருந்தனர். அதற்காக அவர் என் ஊடாக அம் மக்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதாக ரஹிம் தெரிவித்துள்ளார்