இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரி க்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இலங்கையின் பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட தென்னிலங்கை தரப்புக்களை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிஷா தேஷாய் பிஷ்வால் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள் ளார்.
நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்த நிஷா தேஷாய் பிஷ்வால் முதல் சந்திப்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் பேச்சு நடத்தினார்.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக் ஷவும் கலந்துகொண்டார்.
இதன்போது புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
குறிப்பாக இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறிக்கை தொடர்பாகவும் இந்த சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை அறிக்கை சில தினங்களில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில் அந்த விடயம் தொடர்பாகவும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அரசாங்க பிரதிநிதிகளும் அமெரிக்க பிரதி இராஜாங்க செயலரும் கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ் வால் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் குறித்தும் இந்த சந்திப்பின்போது பிரஸ்தாபிக்கப்பட்டு ள்ளது.
இது இவ்வாறு இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நிஷா பிஷ்வாலுக்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதன்போதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் நடத்திய விசாரணையின் அறி க்கை குறித்தும் அரசியல் தீர்வு செயற்பாடு தொடர்பாகவும் பேசப்படும் என எதிர்பார் க்கப்படுகின்றது.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு இதன்போது அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தப்படும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரியாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா தேஷாய் பிஷ்வால் இல ங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேர ணைக்கு அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடு கள் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப் பிடத்தக்கது.