படேல் கைது எதிரொலி : குஜராத் மாநில உள்துறை அமைச்சர் வீட்டிற்கு தீவைப்பு !

26TH_HARDIK_PATEL__2523613f 

 குஜராத்தில் படேல் சமூகத்தினர் அம்மாநில மக்கள் தொகையில் சுமார் 12 சதவீதம் உள்ளனர். மேலும் அந்த சமூகத்தினர் ஆளும் பா.ஜ.க கட்சிக்கு மிகவும் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போது அவர்கள், வேலை வாய்ப்பு மற்றும் பல்கலைக்கழக இடங்களுக்காக தாழ்ந்த சாதியினருடன் போட்டியிட வேண்டியுள்ளது. எனவே தங்களை ஓ.பி.சி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு) பிரிவில் சேர்த்து அதிக இடஒதுக்கீடு தரவேண்டும் என ஹர்தீக் படேல் என்ற 21 வயது இளைஞரின் தலைமையின் கீழ் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

fee91f94-448c-4517-961a-6437d6a484b0_S_secvpf

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று அகமதாபாத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்ட மாபெரும் மாநாடு மற்றும் பேரணி நடத்தப்பட்டது. இதன் முடிவில் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஹர்தீக் படேல் 48 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தார். ஆனால், இதற்கு காவல்துறையிடன் அனுமதி வாங்கப்படாததால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். 

Patel_Protest

இந்நிலையில், ஹிர்திக் படேல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து குஜராத்தில் பல இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. ஆமதாபாத், சூரத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ரஜனி படேல் வீட்டை போராட்டக்காரர்கள் கற்களை எரிந்து தாக்கியதுடன், தீ வைத்தனர். கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் தனது வீட்டில் தாக்கியதாக உள்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து,  மேக் ஷானா பகுதியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.