இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் திரிமானே, மேத்யூஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை இந்திய பந்து வீச்சாளர்களால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை.
மதிய உணவு இடைவேளைக்கு முந்தைய ஓவரில் இந்தியா 2-வது புதிய பந்தை எடுத்தது. இந்த புதிய பந்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு இசாந்த் சர்மா ஆக்ரோஷமாக பந்து வீசினார். இவர் பந்து வீச்சில் திரிமானே, சண்டிமால் அவுட் ஆனார்கள்.
இருவரும் அவுட் ஆகி வெளியேறும்போது இசாந்த் சர்மா ஆக்ரோஷமாக தன மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் அவர்களுக்கு எதிராக சில வார்த்தைகளையும் கூறினார். இசாந்த சர்மாவின் இந்த நடவடிக்கை மைதானத்தில் வீரர்களின் நன்னடத்தை விதிமுறைக்கு எதிரானது என்று தெரிய வந்தது.
இதனால் திரிமானேவுக்கு எதிராக செயல்பட்டதற்கு போடடியில் இருந்து 15 சதவீதமும், சண்டிமாலுக்கு எதிராக செயல்பட்டதற்க 50 சதவீதமும் இசாந்த் சர்மாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 12 மாதங்களுக்கும் இதுபோன்று ஒரு பிரச்சினையில் இசாந்த் சர்மா சிக்கினால் போட்டியில் இருந்து சஸ்பெண்ட் ஆகும் நிலை ஏற்படும்.