புதிய தேர்தல் முறைமையினால் சிறுபான்மை தமிழ் , முஸ்லிம் , மலையக தமிழ் மக்களுக்கு பாதிப்பு – அமைச்சர் ரவூப் ஹக்கீம் !

our_leader1

 மலை­யகத் தமிழ் மக்­க­ளையும், முஸ்­லிம்­க­ளையும், புதிய தேர்தல் முறைமை பாதிப்படையச் செய்யும். எனவே நாங்கள் இந்த விட­யத்தை வெறு­மனே விட்டுக் கொடுக்க முடி­யாது. இது பற்றி தீவி­ர­மாக மீள்­ப­ரி­சீ­லனை செய்­ய வேண்­டு­மென ஓர் அழுத்­தத்தை கடந்த புதன்­கி­ழமை அமைச்­ச­ர­வையில் கொடுத்­தி­ருப்­ப­தாக குறிப்­பிட்ட நகர அபி­வி­ருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம், புதிய தேர்தல் சீர்­தி­ருத்­தத்தை அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்­த­தாக சில ஊட­கங்­களில் வௌிவந்த செய்­தியில் உண்­மை­யில்லை எனவும் மறுத்தார்.

கண்டி மாந­கர கழிவு நீர் முகா­மை­த்­துவ செயற்­றிட்­டத்தை ஹீரஸ்­ஸ­க­லையில் ஆரம்­பித்து வைத்த பின்னர் கண்டி ரோயல் கார்டின் மோல் ஹோட்­டலில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

கண்டி மாந­கர கழிவு நீர் முகா­மைத்­துவ செயற்­றிட்­டத்தின் பயன்­களை பற்றி விளக்­க­ம­ளித்துக் கொண்­டி­ருந்த பொழுது இன்­றைய பர­ப­ரப்­பான அர­சியல் சூழ் நிலையில் அது தொடர்­பான கேள்­வி­களை சிங்­கள, தமிழ் ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடுத்த பொழுது அவற்­றுக்கு அமைச்சர் உரிய பதில்­களை அளித்தார்.

அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரி­வித்­த­தா­வது,

நாங்கள் தேசிய அர­சாங்கம் என்ற சித்­தாந்­தத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இப்­பொ­ழுது சிந்­திக்­கவும், செய­லாற்­றவும் தலைப்­பட்­டி­ருக்­கிறோம். ஆனால், பாரா­ளு­மன்­றத்தில் இப்­பொ­ழுது ஒரே கூச்­சலும், குழப்­ப­மு­மா­கவே இருக்­கின்­றது. கருத்து மோதல்­களும் கோஷங்­களும் எழுந்த வண்­ணமே இருக்­கின்­றன.

அவ்­வா­றான நிலை­மை­களைக் காணும் பொழுது பொது­மக்கள் கலக்­க­ம­டை­கி­றார்கள். ஆனால், இவ்­வா­றான சம்­ப­வங்கள் பற்றி நாங்கள் யாரும் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை. அர­சியல் கட்­சி­க­ளுக்­குள்ளும், அவற்­றிற்­கி­டை­யிலும் பல­வி­த­மான சர்ச்­சை­களும், முரண்­பா­டு­களும் ஏற்­ப­டலாம். ஆனால், இந்த நாட்டின் அர­சியல் தலைமை ஆட்டம் காணாமல் உறு­தி­யாக இருப்­ப­தோடு, மிகவும் பொறுப்­பு­ணர்ச்­சி­யு­டனும் நடந்து கொள்­வது நம்­பிக்­கை­யூட்­டு­வ­தாக இருக்­கின்­றது.

எங்கள் நாட்டின் ஜன­நா­யக கோட்­பாட்டு விழு­மி­யங்கள் நீண்ட இடை­வௌிக்குப் பின்னர் மீண்டும் புத்­து­ணர்ச்சி பெற்று வரு­வதை கண்டு மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம். இதனை கட்­டிக்­காப்­ப­தற்கு அர­சியல் தலை­மைகள் அனைத்தும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும்.

குறிப்­பாக, தென்­கி­ழக்­கா­சிய பிராந்­தி­யத்தில் எந்த ஒரு நாட்­டிலும் அர­சியல் தளம்பல் நிலை தோன்­றிய போதிலும், இலங்­கையைப் பொறுத்­த­வ­ரை­யிலும் முறி­ய­டிக்க முடி­யாத அள­விற்கு பாரிய சவால்கள் எவையும் ஏற்­ப­ட­வில்லை.

20ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் பற்றி பேசப்­ப­டு­கின்ற போதிலும் அது இன்னும் பாரா­ளு­மன்­றத்­திற்கு வர­வில்லை. அமைச்­ச­ரவை அங்­கீ­க­ரித்து, உயர்­நீதி­மன்றம் வியாக்­கி­யானம் செய்து, விவா­தத்­திற்கு எடுத்துக் கொள்­ளப்­ப­ட­வி­ருந்த 19ஆவது அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்­தமே பாரா­ளு­மன்­றத்தில் இழு­ப­றி­பட்டு தாம­த­மாகிக் கொண்டு போகின்­றதை காண்­கின்றோம். இப்­பொ­ழுது அது 27ஆம், 28ஆம் திக­தி­களில் விவா­தத்­திற்கு எடுக்­கப்­பட இருக்­கின்­றது. எதிர்க்­கட்சி அதனை குழப்­பி­ய­டிப்­ப­தற்கு தந்­தி­ரோ­பா­யங்­களை கையாண்டு வரு­வதை காண­மு­டி­கி­றது. இது உதை­பந்­தாட்­டத்தில் பந்து வெற்­றிக்­கம்­பத்தை நெருங்கும் போது கோல் கம்­பத்தை நகர்த்­து­கின்ற காரி­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. இதில் உட்­பூ­சல்கள் இருக்­கலாம்.

ஆனால், அர­சாங்­கத்­தி­ல் அங்கம் வகிக்­கின்றோம் என்ற முறை­யிலும், சிறு­பான்மை கட்­சி­யினர் என்ற முறை­யிலும் நாட்டு மக்­க­ளுக்கு நன்மை பயக்­கக்­கூ­டி­ய­தான அர­சி­யலமைப்பு சீர்­தி­ருத்தம் என்ற விதத்தில் முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்­கு­வது எங்­க­ளது கட­மை­யாகும்.

எதிர்க்­கட்­சியைப் பொறுத்­த­வரை 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்­தத்­தோடு, தேர்தல் முறை­மையை மாற்­றி­ய­மைக்கும் சீர்­தி­ருத்­தமும் கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருக்­கின்­றார்கள். அவர்­க­ளது செயல்­பாட்டில் எங்கள் மத்­தியில் சந்­தேகம் எழுந்­துள்­ளது. சிறு­பான்மைக் கட்­சிகள், சிறிய கட்­சிகள் என்­ப­வற்றைச் சேர்ந்த நாங்கள் இது பற்றி இப்­பொ­ழுது கலந்­து­ரை­யாடிக் கொண்­டி­ருக்­கின்றோம்.

புதன்­கி­ழமை நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் புதிய தேர்தல் சட்ட சீர்தி­ருத்­தத்தை அனு­ம­திக்கச் செய்ய ஜனா­தி­பதி முற்­பட்டார். ஆனால், அது சம்­பந்­த­மான உரிய கலந்­து­ரை­யா­ட­லின்றி அதை செய்­யக்­கூ­டா­தென நானும், அமைச்சர் திகாம்­ப­ரமும் கார­சா­ர­மாக கருத்­துக்­களை கூறினோம். அதனை ஜனா­தி­ப­தியும் ஆலோ­ச­னை­யாக ஏற்றுக் கொண்டார். ஜனா­தி­பதி­யோடும், பிர­த­ம­ரோடும் நாங்கள் பேச்­சு­வார்த்தை நடத்­து­கின்றோம். அவர்கள் இரு­வ­ரி­டத்­திலும் ஒரு­மித்த இணக்­கப்­பாட்டை ஏற்­ப­டுத்தி விட்டு ஏனைய கட்­சி­களின் கருத்­துக்­களும் உள்­வாங்­கப்­பட வேண்­டு­மென்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

பாரா­ளு­மன்­றத்தில் ஒரு ஸ்திர­மான அர­சாங்­கத்தை கொண்டு நடத்­து­வ­தாகக் கூறிக் கொண்டு பிர­தான கட்­சிகள் இரண்­டுக்கு மட்டும் இலா­ப­க­ர­மான முறையில் இவற்றைச் செய்­கின்ற போது, ஏனைய சிறு­பான்மைக் கட்­சிகள், சிறிய கட்­சிகள் தொடர்­பிலும் வேறொரு கோணத்­தி­லி­ருந்து இந்தப் பிரச்­சினை அணு­கப்­பட வேண்டும்.