வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இந்­தியப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள விடயம் இந்­திய அதி­கா­ரி­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என்று ´ரைம்ஸ் ஒவ் இந்­தியா´ செய்தி வெளி­யிட்­டுள்­ளது!

 

vikneswaran-_Fotor_Collage_Fotor

 
 
 

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி க்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அனுப்பி aவைத்துள்ள கடிதம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பிரே­மா­னந்தா ஆசிரம வழக்கில் இரட்டை ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்ட மூவரை விடு­தலை செய்­யு­மாறு கோரி, இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் கடிதம் ஒன்றை அனுப்­பி­வைத்­துள்­ள­தாக இந்­திய ஊட­கங்கள் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யை­யிட்டு தாம் ஆச்­ச­ரி­ய­ம­டை­வ­தாகத் தெரி­வித்­தி­ருக்கும் வட­மா­காண முத­ல­மைச்சர் செய­லக வட்­டா­ரங்கள், குறிப்­பிட்ட செய்தி திரி­வு­ப­டுத்­தப்­பட்ட ஒன்று எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

பிரே­மா­னந்தா ஆசி­ர­மத்தில் இடம்­பெற்ற பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரே­மா­னந்­தா­வுடன் தண்­டனை விதிக்­கப்­பட்ட கம­லா­னந்தா, பாலன் எனப்­படும் பாலேந்­திரன், சதீஸ் எனப்­படும் சதீஸ்­குமார் ஆகிய மூவ­ரை­யுமே விடு­தலை செய்யக் கோரி இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடிக்கு வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்கி­னேஸ்­வரன் கடிதம் எழு­தி­யுள்ளார் என இந்­திய ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.

இருந்­த­போ­திலும், இந்த வழக்கில் தண்­டனை விதிக்­கப்­பட்ட ஒரு­வரின் மகள் அத்­தண்­ட­னையை ரத்துச் செய்­யக்­கோரி இந்­தியப் பிர­தமர் மோடிக்கு கடிதம் ஒன்றை முத­ல­மைச்­சரின் ஊடாக அனுப்­பி­வைத்­துள்ளார். அந்தப் பெண்ணின் கடி­தத்தை இந்­தியப் பிர­த­ம­ருக்கு அனுப்­பி­வைத்த முத­ல­மைச்சர், “சம்­பந்தப் பட்­ட­வர்கள் வட­மா­கா­ணத்தைச் சேர்ந்­த­வர்கள் என்­பதால் அவர்­க­ளு­டைய கடி­தத்தை உங்­க­ளு­டைய கவ­னத்­துக்கு அனுப்­பி­வைக்­கிறேன்” என ஒரு குறிப்பை இணைத்­துள்ளார்.

இதனைவிட கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் கோரவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ரைம்ஸ் ஒவ் இந்­தியா´வின் செய்தி,

இதேவேளை வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், இந்­தியப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்தில் குறிப்­பிட்­டுள்ள விடயம் இந்­திய அதி­கா­ரி­களை அதிர்ச்­சியில் ஆழ்த்­தி­யுள்­ளது என்று ´ரைம்ஸ் ஒவ் இந்­தியா´ செய்தி வெளி­யிட்­டுள்­ளது. 

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் இந்­தியப் பிர­த­ம­ருக்கு எழு­திய கடி­தத்தில், 

பிரே­மா­னந்தா ஆசி­ர­மத்தில் இடம்­பெற்ற பாலியல் வன்­பு­ணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரே­மா­னந்­தா­வுடன் தண்­டனை விதிக்­கப்­பட்ட கம­லா­னந்தா, பாலன் எனப்­படும் பாலேந்­திரன், சதீஸ் எனப்­படும் சதீஸ்­குமார் ஆகிய மூவ­ரை­யுமே விடு­தலை செய்­யு­மாறு குறிப்­பிட்­டுள்ளார். 

மேலும், கம­லா­னந்­தாவும், ஏனைய இரு­வரும், இந்த வழக்கில் போலி­யாக சிக்க வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பிரே­மா­னந்தா ஆசி­ர­மத்­தையும், அதன் சொத்­துக்­க­ளையும் பரா­ம­ரிக்க வேண்­டி­யுள்­ளதால், அதனைப் பொறுப்­பெ­டுக்க வேறு யாரும் இல்­லாத நிலையில், அப்­பா­வி­க­ளான இவர்­களை விடு­தலை செய்­யு­மாறும், இந்­தியப் பிர­த­ம­ரிடம் கோரிக்கை விடுத்­துள்ளார். 

இலங்­கையின் உச்­ச­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ய­ர­ச­ரான சி.வி.விக்­னேஸ்­வரன், இந்­திய நீதி­ய­மைப்பை கேள்­விக்­குள்­ளாக்­கி­யி­ருப்­ப­தாக இந்­திய அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­துடன், குற்­ற­வா­ளி­களை அப்­பா­விகள் என்று தெரி­வித்­தி­ருப்­பது அதிர்ச்சி அடைய வைத்­துள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளனர். 

கொலை மற்றும் பாலியல் வழக்­கு­களில் சிக்­கிய பிரே­மா­னந்தா, குற்­ற­வாளி என்று நிரூ­பிக்­கப்­பட்டு, அவ­ருக்கும் ஏனைய மூவ­ருக்கும் 1997ஆம் ஆண்டு புதுக்­காட்டை நீதி­மன்­றத்­தினால் இரட்டை ஆயுள் தண்­ட­னையும், 66.4 இலட்சம் ரூபா தண்­டமும் விதிக்­கப்­பட்­டது. 

திருச்­சியை அடுத்த பாத்­திமா நகரில் உள்ள ஆசி­ர­மத்தில் 13 பெண்­களை பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தி­யது, மற்றும் ரவி என்­ப­வரைக் கொலை செய்து ஆசி­ர­மத்­துக்குள் புதைத்­தது உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுகள் இவர்கள் மீது சுமத்­தப்­பட்­டன. 

எனினும், 2011ம் ஆண்டு பிரே­மா­னந்தா பல்­வேறு நோய்­க­ளினால் பாதிக்­கப்­பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார். 

இவ­ரது உத­வி­யா­ளர்­க­ளான கம­லா­னந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்­போது புழல் சிறையில் அடைக்­கப்­பட்­டுள்­ளனர். 

பிரே­மா­னந்தா ஆசி­ர­மத்தில் பாலியல் வன்­பு­ணர்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக கூறப்­படும், 13 பெண்­க­ளுமே இலங்கைத் தமி­ழர்­க­ளாவர். 

பாதிக்­கப்­பட்ட ஒரு பெண்­ணிடம் நடத்­தப்­பட்ட மர­பணுப் பரி­சோ­த­னையில் பிரேமானந்தா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட பிரேமானந்தா இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

swami_premananda_20130916_1.jpg.ashx