“சேவைச் செம்மலுக்காய் செஞ்சோற்றுக் கடன் தீர்த்து தேசிய காங்கிரஸ் தியாகிகளானோம்.” BM.சிபான்

-எம்.வை.அமீர்-

நடைபெற்று முடிந்த 8வது பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மருதமுனை தேசிய காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் BM.சிபான் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.

வாக்காளப் பெருமக்களே.! கடந்த கால அரசியல் நிலவரங்களையும், சேவை நோக்கையும் முஸ்லிம் பிரதினிதித்துவத்தின் தேவையையும் கருத்திற்கொண்டு வெவ்வேறு கட்சிகளினூடே நமது நோக்கத்தினை அடைந்து கொள்ளக் கூடிய கட்சியை ஆதரித்தோம்.

அந்த அடிப்படையில் மருதமுனைக்கான பிரதினிதியை தந்த அரசியல் தலைமத்துவம் ஒன்றின் பின்னால் நானும் இன்னும் ஒரு சிலரும் … அந்தப் பிரதினிதி கட்சி மாறி இருக்கலாம். ஆனால் மருதமுனை மக்கள் எனும் அடிப்படையில் நன்றியுணர்வுடன் செயற்பட வேண்டிய தேவை இந்த ஊர் மக்களுக்கு இருக்கின்றது. இருந்தது. அதற்கமைவாகவே எமது செயற்பாடு இருந்தது.

ஒரு வகையினில் தலைவர் அதாவுல்லா வின் வெற்றியை இன்றைய வெற்றி வாகை சூடி நிற்கும் கட்சியான மு.கா மருதமுனை ஆதரவாளர்களும் எங்கள் கட்சியில் இருந்து பிரிந்த மற்றும் அ.இ.ம.கா ஆதரவாளர்களும் விரும்பி இருந்தார்கள் என்பது வெள்ளிடை மலை. இதனை நீங்கள் உங்கள் வாயினால் வெளிப்படுத்தி இருந்தும் கூட செயற்பாட்டுருவில் கொண்டு வராமையே இன்றைய அதாவுல்லாவின் தோல்விக்கான காரணம்.

இதனை தலைவர் அதாவுல்லாவே பல முறைகள்”” தல நஸீப் இல்லை “”என்ற சொல்லின் ஊடாக வெளிப்படுத்துவார்.இம்முறை அவரை இறைவன் பொருந்திக் கொள்ளவில்லை போலும். அல்ஹம்துலில்லஹ்.

ஆனால் அவரின் வெற்றியிலும் தோல்வியிலும் இறுதி வரை நின்று போராடிய பெருமையுடன் நானும் நீங்களும் தே.கா. வரலாற்றில் தியாகிகளானோம். மக்கள் மகிந்தவை நிராகரிப்பதாக எண்ணி அவரை தண்டித்திருப்பது எதிவரும் அரசியல் அரங்கிலே எவ்வாறான மாற்றங்களை கொண்டு வரப் போகுதென்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.

அக்கரையூர் மக்கள் இழந்தவற்றை எவ்வாறு ஈடு செய்ய இருக்கிறார்கள் என்று எமக்குப் புரியவில்லை. அம்மக்களுக்கும் மருதமுனை தேசிய காங்கிரஸ் மத்திய குழு சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இளைஞர் அமைப்பாளர்
தேசிய காங்கிரஸ்
மருதமுனை