கொழும்பு மாவட்ட விருப்பு வாக்குகள்: ரணில் விக்ரமசிங்கவுக்கு 5,00,566 விருப்பு வாக்குகள் !

Colombo-district

இம்முறை பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் விருப்பு வாக்குகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணில் விக்ரமசிங்க 5,00,566 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

சுஜீவ சேனசிங்கவிற்கு 1,17,049 விருப்பு வாக்குகளும், ஹர்ஷ டி சில்வாவிற்கு 1,14,147 விருப்பு வாக்குகளும் ரவி கருணாநாயக்கவிற்கு 1,13,094 விருப்பு வாக்குகளும் கிடைத்துள்ளன.

பாட்டலி சம்பிக்க 1,00,444 விருப்பு வாக்குகளையும் எஸ்.எம்.மரிக்கார் 92,526 வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

முஜீபர் ரஹுமான் பெற்றுக்கொண்ட விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை 83,884 ஆகும்.

இரான் விக்ரமரத்ன 82,738 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதுடன் வி​ஜேதாஸ ராஜபக்ஸவிற்கு 81,758 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

ஹிருனிக்கா பிரேமசந்திர 70,584 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மனோ கணேசன் 69,64 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் விமல் வீரவங்ச அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இதற்கமைய அவருக்கு 3,13,801 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

விருப்பு வாக்கு பட்டியலில் 1,98,818 வாக்குகளுடன் உதய கம்மன்பில இரண்டாம் இடத்திலும் 1,74,075 விருப்பு வாக்குகளுடன் சுசில் பிரேமஜயந்த மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் தினேஸ் குணவர்தன 1,24,451 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

பந்துல குணவர்தன 96,057 விருப்பு வாக்குகளுடன் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மொஹான் லால் கிரேருவிற்கு 65,703 விருப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் காமினி லொக்குகே 58,527 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணிக்கு கொழும்பு மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்திருந்தது.

இதற்கமைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க 65,966 விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.