அபு அலா
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 3 வேட்பாளர்களின் வெற்றியை அட்டாளைச்சேனை பிரதேச மக்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீருடன் இணைந்து இன்று (18) மாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் அட்டாளைச்சேனை காரியாலயத்துக்கு முன்பாக கொண்டாடினார்.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், ஆப்தீன் தமீம், எம்.எல்.கலீல் மற்றும் உயர்பீட உறுப்பினர் யூ.எல்.வாஹிட் கட்சியின் ஸ்தாபக செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வெற்றிகொண்டாட்டத்தில் பங்கெற்றிருந்தனர்.
இச்சந்தோஷ நிகழ்வில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பாற்சோறு வழங்கி வைத்து அந்த மக்களின் சந்தோஷத்தில் பங்குகொண்டதன் பின்னர் மக்களுக்கு சிறு உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.