வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது, ஒரு தாயின் பிள்ளைகளைப் போன்று நாங்கள் அனைவரும் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதற்காக ஒன்றுபட வேண்டும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய யுகத்தின் சவால்களுக்கு முகம்கொடுத்து எங்கள் தேசத்தை முன்னேற்றுவதற்கு ஒருமனதுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளது, அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு எங்களுடன் கைகோர்க்குமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என அவர் விடுத்துள்ள விஷேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.