ராஜஸ்தான் அணியை பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 130 ரன்கள் எடுத்தது. 131ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது.
கிறிஸ் கெயில் கோலி இருவருமே அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். வாட்சன் வீசிய 5 வது ஓவரில் 20 ரன்களுடன் கிறிஸ் கெயில் வெளியேற, அடுத்து வந்த டி வில்லியர்ஸ் கோலியுடன் ஜோடி சேர்ந்து சரமாரியாக அடித்தார்.
மறுமுனையில் கோலியும் அதிரடியாக ஆடி 46 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இருவரது அதிரடியாலும் 16 வது ஓவரின் முதல் பந்திலேயே 134 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி வாகை சூடியது.