அழுத குழந்தையையும் பெற்றோரையும் தரையிறக்கிய விமான ஊழியர்கள்!

boeing-737-700-transavia-635x357 

  மார்க் மற்றும் எரில்லா தம்பதியினர் தங்கள் 19 மாதப் பெண்குழந்தை சரினாவுடன், இஸ்ரேலின் ’பென் குரியான்’ விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்லும் ’ட்ரான்ஸ் அவியா’ விமானத்தில் பயணம் மேற்கொண்டனர். 

மார்க் குழந்தைகளுக்கான பிரத்தியேகமான இருக்கையில் சரினாவை உட்கார வைத்து பாதுகாப்பு பெல்ட் அணிவித்தார். குழந்தையும் லண்டன் போகும் மகிழ்ச்சியிலேயே இருந்தாள். ஆனால் ஒரு ஊழியர் வந்து குழந்தையை பெற்றோர் மடியில் தான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூற வேறு வழியின்றி மார்க் சரினாவை தன் மடியில் வைத்துக் கொண்டார். 

இந்த திடீர் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாத சரினா, கை கால்களை உதறி சத்தம் போட்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள். அங்கிருந்த ஊழியர் இதை கெப்டனிடம் தெரிவிக்க, அலட்சியமான பார்வையுடன் அங்கு வந்த மற்றொரு ஊழியர் என்ன பிரச்சனை என்றே தெரியாமல், ”நீங்கள் தான்… இதை சரி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். 

பெற்றோர்கள் இருவரும் ஊழியர்களின் நடவடிக்கையால் மனச்சோர்வுற்றிருந்த நிலையில் பாதுகாப்பு மீறல் என்று காரணம் சொல்லி, பறக்கத் கொண்டிருந்த விமானத்தை ரன் வேயில் அவசரமாக நிறுத்தி, பாதுகாப்பு அதிகாரிகளை வரவழைத்து சரினா உட்பட மூவரையும் கீழே இறக்கியுள்ளனர்.