தேர்தல் பாதுகாப்புக் கடமைகளுக்காக 63,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் !

police_new

பொதுத் தேர்தலை சுதந்திரமானதும் நீதியுமானதாக நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் என பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 74,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்காக 63,000 இற்கு அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களும், 7,000 இற்கு அதிக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும், 4,000அதிகமான பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாடளாவிர ரீதியில் 2,885 நடமாடும் சேவைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. நடமாடும் சேவையொன்றில் குறைந்தபட்சம் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் பாதுகாப்பு படையின் இரண்டு அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் வாக்களிப்பு நிலையமொன்றில் துப்பாக்கியுடனான இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் ருவன் குணசேகர தெரிவித்தார்.