8வது பொதுத் பொது தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் இன்று பூர்த்தி !

parlimentஏ.எஸ்.எம்.ஜாவித்

நாளை நடைபெறவிருக்கும் 8வது பொதுத்   தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் தேர்தல் திணைக்களம் இன்று (16) நிறைவுக்கு கொண்டு வந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இந்தவகையில் கொழும்பு மாவட்டத்திலும் அதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு இன்று மாலை கொழும்பு மாவட்டத்தில் உள்ள 15 தேர்தல் தொகுதிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் நிலையங்களான றோயல் கல்லூரி மற்றும் டி.எஸ் சேனநாயக்க கல்லுரிகளில் இருந்து பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் வாக்குச் சாவடிகளுக்கான அதிகாரிகளும் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

699 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட கொழும்பு மாவட்டத்தில் உள்ள 15 தேர்தல் தொகுதிகளிலும் 23 இலட்சத்து 22ஆயிரத்து 942 பேரை சனத் தொகையாக கொண்ட கொழும்பு மாவட்டத்தில் 19 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்ய இம்முறை 15இலட்சத்து 86ஆயிரத்து 598பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரு கோடி 50 இலட்சத்து 44ஆயிரத்து 490 பேர் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் 25 அரசியல் கட்சிகளும் 201 சுயற்சைக் குழுக்களும் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளன 225 பேரைத் தெரிவு செய்வதற்கு 6151 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமை முக்கிய அம்சமாகும்.