எமது வெளிநாடு வாழ் மக்களின் உடனடித்தேவை நமக்காக ஒரு அரசியல் பாதுகாவலனை உருவாக்குவதே -றக்கீப் ஜௌபார்

 

-எம்.வை.அமீர்-

இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூட்டனியின் பிரதம அமைப்பாளர் றக்கீப் ஜௌபார் அவர்களை பிரத்தியோகமாக சந்தித்தபோது வெளிநாடுகளில் வாழும் இலங்கை உறவுகளை நோக்கி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
மதிப்பிற்குரிய வெளிநாடு வாழ் இலங்கை மக்களே மற்றும் உள்ளூரில் வசிக்கும் அவர்களது உறவுகளே நண்பர்களே. இன்று நமது நாட்டின் பொருளாதார முதுகெலும்பு வெளிநாட்டு வேலை வாய்ப்பும் வருமானமுமே ஆகும். அவர்களுடைய நலன்களும் ஆரோக்கியமும் சரியாக பேணப்படவில்லையானால் நாட்டின் பொருளாதாரமே சீர்குலையும் ஒரு அபாயம் தோன்றுகிறது.
முக்கியமாக நீங்கள் வெளிநாட்டில் வேலையை திடீரென்று இழந்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் நடுத் தெருவில் நிற்கவேண்டிய ஒரு நிலையே இன்று தொடர்கிறது. 
20 இலட்சம் இலங்கை மக்கள் வெளிநாடுகளில் தொழில் நிமிர்த்தம் வாழ்ந்து கொண்டிருக்க. உள்ளூரில் அவர்களின் வருமானத்தில் தங்கி வாழும் சொந்தங்கள் குறைந்தது இன்னும் 20 லட்சம். மொத்தமாக வெளிநாடு வாழ் இலங்கை தொழிலாளர்களும் கும்பமும் சேர்ந்து குறைந்தது 40 லட்சம். வெளிநாடுகளில்வெயிலிலும் குளிரிலும் பாடு பட்டு , வியர்வை சிந்தி , தனக்காகவும் தனது குடும்ப சுமைக்காகவும் பாடுபடுகிறார்கள். 

நாட்டைப் பிரிந்ததால் நீங்கள் இழந்தவைகள், நீங்கள் இழந்த சுக போகங்கள், இழந்த உறவுகள் , திருமண பந்தங்கள், உங்களை பிரிந்ததால் உங்கள் பிள்ளைகளும் , கணவன் மனைவியும் இழந்தவைகள் எத்தனை?. மீள முடியாத மீட்க முடியாத கஷ்டங்கள் , வேலை செய்யும் இடத்தால் சொல்லோன்னாத்துயரங்கள், மன அழுத்தம் , துஷ்பிரயோகம் ஏன்று சொல்லிக் கொண்டே போகலாம். 20 இலட்சம் தியாகிகள் நீங்கள் உங்கள் உறவுகளுக்காக ஒரு வருடத்திற்கு அனுப்புகின்ற பணம் சுமார் ஒரு லட்சம் கோடிகள். இது நீங்கள் நாட்டின் பொருளாதரத்தின் மிகப் பெரிபங்காளி என்பதற்கான சான்றாகும். துரதிஸ்ட வசமாக , உங்களுக்கும் உங்களுடைய குடும்ப நலனுக்கும் அரசாங்கம் செலவிடும் பணம் வெறும் பத்து கோடிகள் தான். எமதுதூதரகங்கள் உங்களை சரியாக மதிப்பதில்லை. எமது அரசாங்கம் உங்களுடைய பிரிசினைகளை தீர்த்துவைப்பதில் கரிசனை காட்டுவதில்லை. அரசாங்கம் உங்களுக்காக செலவு செய்வதில்லை. உங்களது தொழிலுக்கு ஏதும் நடந்து நீங்கள் நாடு திரும்பினால் ஏன்ன செய்வது ஏன்று உங்களுக்கு தெரியவில்லை. அதற்கு அரசாங்கம் இதற்காக எந்த வொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை . இன்னொரு தொழிலை தேடிப்பெறும் வரைக்கும் உங்களுக்கொரு ஊதியத்தை அரசாங்கம் தருவதில்லை. உள்ளூர் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் உங்களை திரும்பி பார்த்ததே இல்லை . தேர்தல் வந்தால் நீங்கள் வெறும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளராகவே வைக்கப் பட்டிருக்கிறீர்கள். உங்களக்கு வாக்களிக்கும்வசதியாவது தரப்படவில்லை. உங்களில் சிலர் வெளிநாட்டில் இருப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை இல்லாமல் போனது. வெளி நாட்டில் வாழும் உங்களுகென்று குறைந்த கட்டணத்தில் ஒரு பாடசாலை அமைக்கப்படவில்லை . முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் சில இடங்களில் நிரந்தர தூதரக அலுவலகம் அமைக்கப்படவில்லை கஷ்டப்பட்டு நீங்கள் உழைத்த பணத்தை இறுதியில் உங்கள் பிள்ளைக்கு பல்கலைக்கழகம் இல்லை ஏன்பதற்காக கோடி செலவு செய்து படிக்க வைக்கவேண்டிய துர்பாக்ய நிலை. உங்களுக்கு ஏதும் நேர்ந்தால் உங்களின் குடும்பத்தின் நிலை பரிதாபமாகிவிடும். ரிசானாவிற்கு என்ன நடந்தது என்று உங்களுக்கு நன்கு தெரியும் . நமது அரசாங்கத்தின் பலவீனத்தால் அந்த உயிரும் கைநழுவி போனது. இரட்டை பிரஜா உரிமைக்கான கட்டணம் 250 000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது இது பாரிய அநியாயமாகும். மேலும் ஓரிரு தனிப்பட்ட அரசியல் விரோதிகளைக் குறிவைப்பதற்காக , ஒட்டு மொத்த இரட்டை பிரஜைகளின் தேர்தல் வேட்புரிமை நல்லாட்சி எனும் பெயரில் நீக்கப்படிருக்கிறது. உண்மையான பல சமூக ஆர்வலர்கள் இதனால் செயலிழந்து நிற்கின்றனர். உங்களது சொத்துக்களுக்கு பாதுகாப்பில்லை. 

ஏன் இவர்களால் வெளிநாட்டு மக்கள் நல வரி ஒன்றை அறிமுகப்படுத்த முடியாது ?, அதை கொண்டு வெளி நாடுவாழ் மக்கள் மற்றும் அவர்களின் உறவுகளுக்கான நலத்திட்டங்களை உரூவாக்க முடியாது ? .

உங்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தேங்கி நிற்பதற்கு காரணம், உங்களுக்காக பேசக்கூடிய அரசியல் யாரையும் நீங்கள் உருவாக்கவில்லை. நீங்கள் அதற்காக் ஒற்றுமை பட்டதுமில்லை உங்களுடைய அரசியல் சக்தி பூச்சியமே. நமது பொருளாதரத்தை சுரண்டி உள்ளூர் அரசியல் கட்சிகள் பிழைப்பு நடாதியதே மிச்சம். நீங்கள் உங்கள் ஊருக்கும் இனத்திற்கும் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று நேரத்தை வீனடிதீர்களே தவிர . உங்களுக்காக பிரதிநிதிகளை , ஆட்சிகளை உருவாக்க தவறி விட்டீர்கள் குற்றவாளி நீங்கள் தான். 40 லட்சம் வாக்குபலதைக் கொண்ட பெரும் சமுகமும் நீங்கள் தான் ஏன்பது உங்களுக்கே தெரியாது. எமது பிரதிநிதகள் பாராளுமன்றத்திலும், மாகாண சபையிலும், பிரதேச சபையிலும் கூட இல்லை. நிலைமை இப்படி இருக்க எங்கிருந்து பிரச்சினை தீரும் . யார் நமக்காக பேசுவார் ?. வெளிநாட்டில் வாழும் இலங்கையரின் நல திட்டங்களை உருவாக்குவது யார் ?. இனி நாமே அந்த சக்தியாக மாறு வோம் .40 லட்சம் வாக்கு வங்கியை வைத்து எதை செய முடியாது? இன்று நமது இடம்பெயர் வெளிநாட்டு மக்களின் உடனடித்தேவை நமக்காக ஒரு அரசியல் பாதுகாவலனை உருவாக்குவதே. எமக்காக பேச்கூடிய 70 பாராளுமன்ற பிரதிநிகலை நாமேஉருவாக்குவோம். மாகாண சபை ஆட்சியை நாங்களே தீர்மானிப்போம் . ஜனாதிபதி யார என்பதை கூட நாங்களே தீர்மானிப்போம். பாலைவனங்களிலும் குளிரிலும் கஷ்டப்படுகின்ற எங்களில் சிலர் பாராளுமன்றம் சென்று எங்களுக்காக பேசட்டும் இதை இத்தோடு நிறுத்தி விடாமல் , உங்கள் குடும்பதிற்கும் இதன் அவசியத்தை எடுத்துக் கூறுங்கள். நீங்கள் ஒன்று பட்டால் அரசாங்கம் உங்களைத் திரும்பி பார்க்கும் . தேர்தல் வின்ஜாபனங்களில் உங்கள் வரிகள் மேலே நிற்கும். அரசாங்கம் நம்மில் தங்கி இருக்கும் சூலலை உருவாக்க வேண்டும். வெளி நாடுகளில் இருக்கும் உங்களுக்கு முதலில் வாக்களிக்கும் வசதியை பெற்றுக்கொடுக்க போராடுவோம். இனம் மதம் பிரதேச பேதமில்லாமல் , வெளிநாடு வாழ் இலங்கையர் ஏன்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப் படுவோம். உங்களுக்கு சலுகைகள், ஓய்வுதியம், வேதனங்கள், தொழில் வாய்ப்பு, பிள்ளைகளுக்கு பல்கலைக்கழகம் , பிரஜா உரிமை, வேட்புரிமை, வாகன வரி நீக்கம், வட்டியில்லாத கடன், சம்பள பிரச்சினை, சொத்துடமை பாதுகாப்பு, மற்றும் அணைத்து தேவைகளையும் வென்றெடுக்கலாம். இந்த விதையின் பலன் நமது அடுத்த சந்திதிகாவது கிடைக்கட்டும் அதை இங்கிருந்தே ஆரம்பிப்போம். 
இவை யனைத்தும் நீங்கள் ஒற்றுமை படாமல் சாத்தியமாகாது. இப்படியே இருந்து விட்டால் . இனியும்இழப்பதற்கு ஒன்று மில்லை ஏன்று மின்சியதைக் கூட இழக்க நேரிடும் . இனம் மதம் பிரதேச பேதமில்லாமல் , வெளிநாடு வாழ் இலங்கையர் ஏன்ற ஒரு குடையின் கீழ் ஒற்றுமைப் பட்டு புறப்படுவோம் வாரீர்.