“உண்மையில் எனக்கும் பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனுக்கும் இடையில் எந்தவிதமான காதல் தொடர்புகளும் இருக்கவில்லை. நான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு தடவை கூட தாஜுதீனை சந்தித்தது கிடையாது.
அதுமட்டுமின்றி ,குறைந்தது தொலைபேசியில் கூட நான் அவருடன் உரையாடியது இல்லை.
2012 ஆம் ஆண்டு தாஜுதீனுடைய மரணம் நடைபெற்று ஒரு மாதம் கடந்த நிலையில் தான் இது தொடர்பான விடயங்கள் சமூக வலைத்தளங்களில் போலியாக பரப்பப்பட்டன. அதன்பின் தான் இது தொடர்பான விடயங்கள் காட்டுத்தீ போல் அனைவர் மத்தியிலும் பரவ ஆரம்பித்தன. இருப்பினும், சிறிது காலம் இது தொடர்பான விடயங்கள் எதுவுமே வெளிவரவில்லை.
ஆனால், ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்தே இது தொடர்பான விடயங்கள் மீண்டும் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன.
எனக்கு சற்றும் தெரியாத ஒருவரை என்னோடு தொடர்புபடுத்தி ஏன் செய்திகளை பரப்புகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. ஆரம்பத்தில் தாஜுதீனுடைய மரணம் ஒரு விபத்து என்று செய்திகளை வெளியிட்டிருந்தார்கள்.
அதன்பின் அது ஒரு விபத்தல்ல கொலையாக இருக்கக்கூடும் என்று செய்திகளை வெளியிட்டார்கள்.
எனவே, காலத்துக்கு காலம் தாஜுதீனுடைய மரணம் தொடர்பாக வெவ்வேறு கருத்துகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் எதற்காக அவருடைய காதலியாகவும், தோழியாகவும் என்னை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் செய்திகளையும் அதுதொடர்பான வீடியோக்கள், படங்களையும் வெளியிடுகின்றார்கள் என்று எனக்கு விளங்கவில்லை”.
இவ்வாறு மரணித்த பிரபல றக்பீ வீரர் வஸீம் தாஜுதீனின் காதலி என்று சமூகவலைத்தளங்களில் கூறப்படும் யசாரா அபேநாயக்க சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். அவர் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
“எனது தந்தை ஒரு சினிமா, தொலைக்காட்சி இயக்குநர், தாயார் வைத்தியர் . நான் இப்போது வெளிநாடுகளில் பல்வேறு சமூக சேவைகளில் என்னால் முடிந்த பங்களிப்பை மேற்கொண்டு வருகின்றேன். குறிப்பாக, வயோதிபர்களை பராமரிக்கும் பணிகளுக்கு என்னால் முடிந்த பங்களிப்பை செய்து வருகின்றேன்.
” 2012 ஆம் ஆண்டு தாஜுதீனுடைய மரணத்துடன் என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் போதே அது தொடர்பாக எனது எதிர்ப்பை ஊடகங்கள் வழியாக நான் வெளிபடுத்த விரும்பினேன்.
எனினும், இணையத்தளங்களில் வெளிவரும் இவ்வாறான வீடியோக்கள், படங்கள், செய்திகள் தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம் என்று நண்பர்கள் பலரும் எனக்கு அறிவுரை வழங்கினார்கள். மேலும் மக்களுடைய நற்பெயருக்கு சேறு பூசி அவர்களின் கௌரவத்தையும் சுயமதிப்பையும் களங்கப்படுத்தும் இணையத்தளங்களுக்கு பின்னால் சென்று நியாயம் பெற நானும் விரும்பவில்லை.
ஆனால், இதில் உண்மையில்லை என்ற போதிலும், தாஜுதீனுடைய மரணம் தொடர்பாக என்னை தொடர்புபடுத்தி செய்திகள் வெளிவந்த வண்ணம் இருப்பதால் எதிர்காலத்தில் என்னிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம். ஆனால், அதற்கு எந்த அவசியமுமில்லை. தாஜுதீனை எனக்கு தெரியாது என்பதே உண்மை. இதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமின்றி, இலங்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்த ஊடகங்களிலும் இது தொடர்பான செய்திகள் வெளிவரவில்லை. எனவே, தான் நான் தொடர்ந்து மௌனம் சாதித்துவருகின்றேன்.
சமூகவலைத்தளங்களில் வெளிவரும் செய்திகளினால் என்னால் இன்று தலை நிமிர்ந்து வெளியில் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எல்லோரும் என்னிடம் இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை கேட்கின்றார்கள். இதனால் நான் பெரும் மனஅழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றேன். அதைவிட என்னால் இன்று எனது குடும்பத்தவர்களும் நிம்மதியை தொலைத்து விட்டு கண்ணீர் சிந்துகின்றார்கள்.
ஆகவே, சமூக வலைத்தளங்கள் செய்திகளை அறியும் ஊடகங்களாக இருப்பதுடன், அவை மக்களின் சுய மதிப்பையும், கௌரவத்தையும் இல்லாதொழிக்கும் காரியங்களையும் இன்று செய்துவருகின்றன. அரசியல், தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கும், சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆகவே, இது ஒரு போலியான நாடகம் மாத்திரமே. இதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. ஆகவே, இவ்வாறான நம்பகதன்மையற்ற செய்திகளை நம்ப வேண்டாம்.
பிரபல றக்பி வீரர் வஸிம் தாஜுதீனுடைய மரணம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே அந்த விசாரணை அறிக்கை வெளிவந்ததும் மக்களால் எது உண்மை என்பதை தெரிந்துக்கொள்ள முடியும் இவ்வாறு அவர் தனது நேர்காணலின் போது தெரிவித்திருந்தார். யசாரா அபேநாயக்க றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் மரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளார்,