நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் (Member of Parliament) என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள்செனட்டர்கள் என்றோ பிரபுக்கள் என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள்.
ஆங்கிலச் சுருக்கமான “எம்.பி” (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.அதாவது மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிகள் என நாம் கருதிக்கொள்ளலாம்.
· 1 வெஸ்ட்மினிஸ்டர் முறை
o 1.1 அயர்லாந்து
o 1.2 ஆஸ்திரேலியா
o 1.3 இந்தியா
o 1.4 இலங்கை
o 1.5 ஐக்கிய ராச்சியம்
o 1.6 கனடா
o 1.7 கென்யா
o 1.8 சிங்கப்பூர்
o 1.9 சிம்பாப்வே
o 1.10 நவூரு
o 1.11 நியூசிலாந்து
o 1.12 பங்களாதேசம்
o 1.13 பாகிஸ்தான்
o 1.14 மலேசியா
o 1.15 மால்டா
· 2 பிற முறைகள்
o 2.1 ஆஸ்திரியா
o 2.2 இசுரேல்
o 2.3 இத்தாலி
o 2.4 சுவீடன்
o 2.5 மசிடோனிய குடியரசு
o 2.6 தாய்லாந்து
o 2.7 துருக்கி
o 2.8 நெதர்லாந்து
o 2.9 நோர்வே
o 2.10 பல்கேரியா
o 2.11 போலந்து
o 2.12 யேர்மனி
o 2.13 லெபனான்
o வெஸ்ட்மினிஸ்டர் முறை
இந்தியா
இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும்.
மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும்.
மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது.
சிங்கப்பூரில்:
சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக அறியப்படுவர்.
இலங்கை:
இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது.
இலங்கை நாடாளுமன்றம் 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும்.
இலங்கையின் கடந்த கால நடாளுமன்றம்
சுதந்திர இலங்கை சோல்பரி யாப்பின் கீழும், 1972ல் சொந்த மண்ணில் உதித்த அரசியலமைப்பு முறையிலும், 1978ன் தற்போதைய அரசியல் அமைப்பின் கீழும் பல்லின மக்களினதும் கணவான் அரசியல்வாதிகளைக் கண்டிருந்தது.இத்தகையோர்கள் சட்டவாக்க சபையிலும் பின்னாட்களில் நாடாளுமன்றிலும் மக்களின் பிரச்சினைகளை முதன்மைப்படுத்தி அவற்றிக்குரிய தீர்வினையும் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது கண்கூடு. காலப் பொருத்தம் கருதி அவர்களின் பெயர்களை ஒவ்வொருவராக இங்கே குறிப்பிட முடியாதுள்ளது.
அரசியலுக்கு நீங்கள் ஏன் வந்தீர்கள் என்ற வினாவைத் தொடுத்தால், நமது அரசியல்வாதிகள் சொல்லும் விடை” சமூக சேவைக்கு .என்பதாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழ் உள்ளது. ”charity begins at home”.Be generous to your family before helping others. தர்மமானது வீட்டில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதுதான்.மற்வர்களுக்கு உதவி செய்யும் முன் உனது குடும்பத்துக்கு உண்மைக்கு உண்மையாக உதவி செய் என்பதாகும்.
மக்களவை உறுப்பினர் யாராகவிருக்கலாம்
அண்மைய பாராளுமன்றமத்தில் சட்டத்தரணிகளும், பேராசியர்களும், கல்விமான்களும்,துறைசார் நிபுணர்களும், சமூச சேவைக்கென்றே தங்களை இளைமை தொட்டு அரப்பணித்த சமூக சேவை ஆர்வலர் பலரும் காணப்பட்டதனை மறுக்கவோ மறுதலிக்கவோ முடியாது. இவ்வாறு பலரும் இருப்பதன் நோக்கம் யாதெனில், அரசியலமைப்புத் தொடா்பான விடயங்களுக்கு, அரசியல் அமைப்பு பற்றிய அடிப்படை அறிவு கொண்டவர் தேவை. சட்டத் திருந்தங்கள் வரும் போது சட்டவல்லுனர்கள் அங்கு தேவை.
கல்விசார் விருத்திகள் மேற்கொள்ளப்டும் போது ஆகக் குறைந்து கல்விமானின் சேவை அங்கு தேவை. இவற்றுக்கு மேலதிகமாக சமூக சேவையாளனும் தேவைப்படுகின்றார். பட்டதாரிகளை மாத்திரமே பாராளுமன்றம் செல்ல வேண்டும் அவர்களைத்தான் அனுப்ப வேண்டும் என்றும் சொல்லவில்லை. சமூகப் பிரக்ஞையற்றவா்களைத் தேர்வு செய்து அவர்கள் சரணாகதி அடைவதைவிட சமூகஞ்சார் விழிப்புள்ளவர்கள் தேர்வு செய்யப்படவும் வேண்டும்.
தேசியப்பட்டியல்
இவ்வாறானவா்கள் மக்களால் தெரிவு செய்யப்படாதவிடத்து, துறைசார் நிபுணர்களை சோ்ப்பதற்காக வந்த முறையே தேசியப்பட்டியல் தெரிவு முறையாகும்.அது கொண்டு வரப்பட்ட நோக்கமும் அதுதான்.தேசியப் பட்டியல் முறைமையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தடம் பதித்த பலர் காணப்பட்டனர்.ஆயினும் அதே உன்னதமான தேசிய பட்டியல் முறைமையின் கீழ் சில அரசியல் கட்சிகள் தரமற்றவர்களைச் சேர்த்ததனால் கேலிக்கூத்தாகிப் போனது நாடாளுமன்றம்.
கட்சியினை வளா்ப்தற்காக காசு கொடுத்தவர்களுக்கும், தமக்கு கூஐாத் துாக்குபவா்களுக்கும், தமது உறவினர்களுக்கும், தமது கட்சிக்காக உழைத்தவர்கள் என்ற வகிபாகத்தில் கொடுத்து அதனை மலினப்படுத்தி மாசுபடுத்திய பெரும்பான்மைக் சிறுபான்மைக்கட்சிகள் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.மக்களால் நிராகரிக்கப்பட்வர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்க வேண்டிய தேவை கிடையாது.
இவ்வாறு தோற்கடிக்கப்பட்வர்களுக்கு ஒரு கட்சி ஒரு முறை கொடுத்து விட்டால், தோல்வியடையும் வேட்பாளர்கள் தமது கட்சித் தலைவரினதும் செயலாளர்களினதும் கால்களில் விழுந்து, முழந்தாழிட்டாவது மீளவும் நாடாளுமன்ற அங்கத்துவத்தினைப் பெற முயற்சிப்பர்.
நமது பிரதிநிகளின் செயற்பாடு
அண்மைக்கால நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தேர்தல் முடிந்த கையுடன் கொழும்பில் குடி கொண்டு விட்டால் வாக்களித்த மக்களை மீளச் செ்னறு பார்ப்பதற்குகூட அவகாசம் கிடைப்பதில்லை. இன்னுமொரு சிலா் கால் அமைச்சு , அரை அமைச்சு, முழு அமைச்சுக்களைப் பொறுப்பெடுத்துக் கொள்வா்.கூடவே கொந்தராத்துக்களையும், தரகுகளையும் பெற அங்கப் பிரதிஸ்டை செய்வர்.இவற்றை அபிவிருத்தி அரசியலாகவும் காட்ட எத்தனிக்கின்றனர்.சொந்த மக்களின் உரிமைக்காக இவர்கள் பாராளுமன்றில் உரைத்ததே கிடையாது.
ஒரு சில உறுப்பினர்களோ மக்கள் நாடாளுமன்றம் அனுப்பியதன் நோக்கம் குரல் கொடுப்பதற்காகவென்று, குரலெழுப்பிக் கொண்டே இருக்கின்றனர். பக்கத்து வீட்டுக்காகரனின் தினாந்தரப் பசியைக்கூட என்னவென்று பார்ப்தற்கும் நேரமிராது.
இன்னுஞ் சிலரோ தமது பிள்ளைகளையும் குடும்பத்தாரையும் நல்ல கல்லுரிகளில் சேர்ப்பார்கள்.அவர்களுக்கு சிறந்த உள்நாட்டு வெளிநாட்டுத் தொழில்வாய்பை பெற்றுக் கொடுப்பர்.இல்லாது போனால், தமது புதல்வர்கைளையும் அரசியல் வியாபாரத்தில் பிரேதேச மட்டங்களில் ஈடுபடுத்துவர்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் வியாபாரமாக செய்து வரகின்றனர்.இதற்காக தமது அடியாட்களையும் ஏவலாட்களையும் குண்டர்களையும் வைத்து என்ன விலைகொடுத்தாவாது அடுத்த முறையும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பதற்காக அடிதடி கலாசாரத்ததையும் பயன்படுத்த தவறுவதே இல்லையெனலாம்.
தகுதியானோர் ஒதுங்குதல்
இத்தகைய வாழ்வுக்கும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான நாடாளுமன்ற தேர்தல் போராட்டத்தில் நாம் ஏன் ஈடுபட வேண்டும் என்று படித்த, பண்புள்ளவர்கள் அரசியலை விட்டு ஒதுங்கியதால், உதவாக்கரை அரசியல் வியாபாரிகள் நாடாளுமன்றம் சென்று அங்கு அதனை காட்டுதர்பாராக மாற்றிய கடந்த காலப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் வரலாறு மறக்காது. எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கட்சியின் வளர்சிக்குப் பங்காற்றுபவர்களைவிட,மக்களின் நலனோம்பு திட்டத்தில் அக்கரை செலுத்துவோருக்கு முனனுரிமை கொடுக்கவேண்டும்
முதற் தரமானோரைத் தேர்வு செய்தல்
தமக்கான உரிமையினையோ, அபிவிருத்தியியையோ,சலுகைகளையோ பெற முடியாதவர்களை (தகுதியற்றவர்களை) அடுத்து வரும் 05 வருடங்களுக்கு தங்களின் பிரதிநிதியாக தெரிவு செய்து பின்பு,அவர்கள் தமது பிரச்சினைகளை திரும்பிப் பார்க்கவி்ல்லையெக சந்திகளில் வசைபாடித்திரிவது, அல்லது துண்டுப் பிரசுரங்களை வெளியிடுவது, அவா்களை கண்டவுன் ஏசுவது போன்றவற்றை செய்வதைவிடவும், நின்று நிதானித்து கற்றறிந்த(படித்த)கறைபடியாத(உளழல் மோசடிகளற்ற)காருண்யமிக்க(பரிவு)கொண்ட, சலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக் கொடுக்காத, உரிமைபற்றிப் பேசி, காலத்ததைப் புறந்தள்ளாத புதிய தலைமுறைகளைச் சார்ந்தவா்களை தெரிவு செய்வோம்.
இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்(எல்எல்பி)
சட்டத்தரணி