அஸ்ரப் ஏ சமத்
நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சரின் வேலைத்திட்டத்தின் கீழ் பேருவளை, களுத்துறை வாழ் 9ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீா்த்திட்டம்.
இத் திட்டத்திற்காக ஜப்பான் ஜெயிக்கா வினால் 108 மில்லியன் ருபாவும் நீா்விநியோக சபையினால் 25.5 மில்லியன் ருபாவும் வழங்கப்படுகின்றது. அடுத்த 2 வருடத்திற்குள் இத்திட்டம் பூரணப்படுத்தப்படும்
இத்திட்டததிற்காக ரத்மலானையில் உள்ள நீர் விநியோக சபையின் பிரதிப் பொதுமுகாமையாளா் ( யப்பான் உதவி நீர்திட்டம்) சாய்ந்தமருதுாரைச் சோந்த பொறியியலளாரும் எம்.எம். உமா் முன்ணிலையில் ஜப்பான் மற்றும் உள்ளுா் ஒப்பந்தக்காரா்களுக்குமிடையில் ஒப்பந்தம் நேற்று (14)ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
நகர அபிவிருத்தி நீர்விநியோக வடிகாலமைப்பு அமைச்சின் அமைச்சா் அதிகாரிகள் எடுத்த நடவடிக்ககையின் பேரில் 9ஆயிரம் குடும்பங்கள் குழாய் நீர் திட்த்தினை பெற்றுக் கொள்ள உள்ளனா்.