மயிலின் வெற்றி இரட்டிப்பானது; ஹக்கீமின் காதறுப்பு விழா நாளை!!

10384674_1539570722957468_7806713547093066617_n_Fotor_Collage_Fotorஏ.எச்.எம்.பூமுதீன் 
மயில் வேட்பாளர் வீசி இஸ்மாயிலுக்கு எதிராக முகா தரப்பினரால் தொடரப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
வீசி இஸ்மாயிலை வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் அல்லது பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டால் அப்பதவியிலிருந்து விலக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி முகா வினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதியரசர் குழுவினரால் முகா வின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்திற்க்கு இருக்கும் பாரிய செல்வாக்கு முகா வுக்கு பாரிய சரிவை ஏற்படுத்தியிருந்தது.
இதிலிருந்து மக்களை திசை திருப்பும் நோக்குடனேயே வீசிக்கு எதிரான மேற்படியான பொய்க் குற்றச்சாட்டை  முகா சுமத்தியிருந்தது.
இந்த குற்றச்சாட்டு குறிப்பாக சம்மாந்துறை தொகுதி மக்கள் மத்தியில் ஒரு தளம்பல் நிலையை ஏற்படுத்தியிருந்தது.
இதனால் கடந்த ஒரு வார காலமாக மரத்திற்கு 50 வீதமும் மயிலுக்கு 50 வீதம் என்ற நிலை காணப்பட்டு வந்தது.
இன்றைய வழக்கு தள்ளுபடியினை அடுத்து முழு சம்மாந்துறை தொகுதியிலும் மயிலின் ஆட்டம் தோகை விரித்து ஆடுகின்றது.
அத்துடன் அம்பாறை மாவட்டம் முஸ்லிம் பிரதேசம் எங்கும் மயிலின் வெற்றி மேலும் உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு ஆசனம் என்ற இலக்கிற்கு தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தான் வீசி பாராளுமன்றம் சென்றால் எனது காதை அறுப்பேன் என்ற முகா தலைவரின் ஆவேசப் பேச்சு மக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்தள்ளது.
முகா தலைவர் தனது இடது பக்கக் காதை எப்போது அறுப்பார்? என்பதுதான் இன்று அம்பாறை மாவட்ட முஸ்லிம்களிடம் எழுந்துள்ள கேள்வியாகும்.
பொதுத் தேர்தல் 2015க்கான இறுதிப்பிரச்சாரம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைய உள்ள நிலையில் முகா வின் இறுதிப்பிரச்சாரம் நாளை மருதமுனையில் இடம்பெறவுள்ளது.
இதில் பிரதம அதிதியாக முகா தலைவர் ஹக்கீம் கலந்து கொண்டு விசேட உரை ஆற்றவுள்ளார்.
ஹக்கீமின் நாளைய விசேட உரையின் பின்னர் மருதமுனை கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் வைத்து அவர் தனது இடது பக்க காதை அறுத்துக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருவான அக்கட்சியின் தலைவர் அதற்கு மாற்றமாக உண்மைக்கு புறம்பாக தான் வழங்கிய வாக்குறுதிக்கு மாற்றமாக செயற்படமாட்டார் என்பதே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் ஒருமித்த கருத்தும் நிலைப்பாடுமாகும்