சாய்ந்தமருதுக்கோ ,கிழக்குமாகாண மக்களுக்கோ அல்லது முழுநாட்டுக்குமோ நான் என்ன செய்திருக்கிறேன்என்பதை உங்கள் ஒவ்வொருவரதும் மனச்சாட்சியிடம் கேட்டால் கூறும் – அதாவுல்லாஹ்

எம்.வை.அமீர்

நாட்டில் தற்போது மாற்றம் என்ற பெயரில் தலைவர்கள் மாறியிருக்கின்றார்கள். நாங்கள் இணைந்துள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர்தான் இப்போதும் நாட்டின் தலைவர். என்ற அடிப்படையில் நாட்டுமக்களில் அதிகமானோர் வாக்களித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ்தான் இந்த அதாவுல்லாஹ்வும் இருக்கிறேன்.

இப்போது பாராளமன்ற தேர்தல் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அந்தந்தா பிரதேசத்துக்கு தகுதியான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள்தான் நீதிபதிகள் அந்த நீதிபதிகள் அல்லாஹ்வுக்கு பயந்து தங்களது தீர்ப்பை வழங்க வேண்டும் வெறும் கோஷங்களுக்கோ பணத்துக்கோ அடிபணிந்துவிடக்கூடாது. என்று சாய்ந்தமருது கடற்கரை வீதி பௌசி விளையாட்டு மைதானத்தில் அக்பர் ஜும்மா பள்ளிவாசலின் தலைவர் எம்.எம்.ஜப்பார் அவர்களது தலைமையில் தேசிய காங்கிரசின் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலேயே முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த அதாவுல்லாஹ் சாய்ந்தமருதுக்கோ அல்லது கிழக்குமாகாண மக்களுக்கோ முழுநாட்டுக்குமோ என்ன செய்திருக்கிறேன் என்பதை உங்கள் ஒவ்வொருவரதும் இதயங்களிடம் கேட்டால் கூறும். நாங்கள் செயற்பட்டதெல்லாம் நமது எதிர்கால சந்ததிகளின் நின்மதியான வாழ்வுக்குத்தான். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த கொடிய பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பதற்கு உத்தரவாதத்தைப் பெற்று, அது இல்லாதொழிக்கப்பட்டது. அதனூடாக கடந்தகாலங்களில் நாங்கள் அச்சத்துடன் பயணித்த நிலை முடிவுக்குக்கொண்டு வரப்பட்டது. வடகிழக்கில் இருந்து கிழக்கைப் பிரித்ததன் ஊடாக முதலமைச்சர்களாகவும் அமைச்சர்களாகவும் எங்களை நாங்களே ஆளும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

சாய்ந்தமருது மக்கள் வைத்தியசாலை என்றார்கள் அதற்க்கான ஆரம்பகட்ட செயற்பாடுகளை நாங்கள் செய்தோம் கட்டிடங்கள் வீதிகள் என எத்தனையோ செய்தோம்.கடந்த காலத்தில் முன்னாள் அதிபர் வசீரை பாராளமன்ற உறுப்பினராக்க முயச்சித்தோம் இம்முறையும் ஒருவரை வழங்க ஆட்களைத்தாருங்கள் என்றோம் எங்களிடம் இருந்து காணாமல்போன சிறாஸ், எங்களுடனேயே இருந்திருந்தால் இப்போது அவர் பாராளமன்ற உறுப்பினராக ஆகியிருப்பார். எல்லாம் தலைநசீபு என்றார்.

உங்களுக்கு எதையுமே செய்யாதவர்கள் இப்போது வந்து வாக்குக் கேட்கிறார்கள் நாங்கள் இந்த சாய்ந்தமருதுக்கு நிறைய செய்துள்ளோம் இனியும் செய்வோம் உங்களுக்கு மனச்சாட்சி இருக்கிறது எல்லோரும் அல்லாஹ்விடம் போய் பதில் சொல்ல வேண்டும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்க உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் தான் உங்களிடம் வாக்குக் கேட்டு வந்திருக்கின்றேன் இம்முறை இம்மாவட்டத்தை வெல்லப்போவதும் தேசிய ரீதியாக வெல்லப்போவதும் ஐக்கியமக்கள் கூடமைப்புத்தான். நாங்கள் மூன்று பாராளமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கான சிறந்த வியூகத்தை வகுத்துள்ளோம். அதனூடாக மூன்று முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களைப் பெற்று, நமது பிராந்தியத்தை மறைந்த தலைவர் காட்டிய வழியில் அபிவிருத்தி செய்வோம் என்றார்.

நமக்குக் கிடைக்கவேண்டிய பாராளமன்ற பிரதிநிதித்துவத்தை நாங்கள் பெற்றே ஆகவேண்டும். எந்தக்காரணம் கொண்டும் எங்களது தலைகளில் நாங்கள் மண்ணைப் போட்டுக்கொள்ளக் கூடாது. றிசாத் பதியூதீன் எனது நல்ல நண்பர். றவூப் ஹக்கீம் வன்னியில் தனது பிரதிநிதத்துவத்துக்கு ஆப்பு வைக்கிறார் என்பதற்காக ஹக்கீமை எதிர்ப்பதற்காக அம்பாறை மாவட்ட பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைக்க முனைவதை ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் நன்றாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.அவர்களால் ஒரு ஆசனத்தைத் தானும் பெற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

1 atha 2 atha 3 atha 4 atha