எம்.வை.அமீர்
நாட்டின் தேசிய வருமானத்துக்கு பெரிதும் பங்களிப்புச்செய்யும் வெளிநாடுகளில் வாழும் அல்லது தொழில் செய்யும் 20 லட்சம் மக்களுக்கு ஜனநாயக ரீதியில் வாக்களிக்கக்கூடிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூடமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் மகஜர் ஒன்றைக் கையளித்தது.
இவர்களது மகஜரை மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்று HRC/KL/138/2015 என்ற இலக்கத்தை வழங்கியுள்ளது.
மகஜரை இலங்கை இடம்பெயர் தொழிலாளர் கூடமைப்பின் சார்பில் அவ் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரகீப் ஜௌபார் , மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கையளித்து விட்டு ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இடம் பெயர் தொழிலாளர்களின் வாக்களிக்கும் உரிமை மீறப்படுவது சம்மந்தமாக இன்று நாங்கள் மனித உரிமை ஆணைக் குழுவிடம் ஒரு முறைப்படி கையளித்திருக்கிறோம். எமது கோரிக்கையாக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையருக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் வரை தேர்தல் ஒன்று நடாத்தக் கூடாது என்பதுதான். ஏனைய வெளிநாட்டுக் குழுக்களும் சங்கங்களும் எங்களுடன் இணையுமாறு அழைப்பு விடுக்கிறோம்.
வெளிநாடுகளில் வாழும் 20 லட்சம் மக்கள் வாக்களிக்காமல் ஒரு அரசாங்கத்தை தெரிவு செய்வது எந்த விதத்தில் ஜனநாயகமாகும். மாப்பிள்ளை இல்லாமல் ஒரு திருமணம் நடப்பது போலவே தோன்றுகிறது. 20 லட்சம் வாக்குகள் என்பது ஒரு அரசாங்கத்தை தீர்மானிக்கும் ஒரு சக்தியும் , தாமே 50 பிரதிநிதகளை பாராளுமன்றத்தில் உருவாககுடிய ஒரு சக்தியுமாகும். காலம் காலமாக இடம்பெயர் மக்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்து தரப்படும் என்று அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டே வருகிறதை நாம் அறிவோம்.
எமக்கென ஒரு தலைமையும் அமைப்பும் உருகாத வரை எதையும் வென்றெடுக்க முடியாது. மேலும் நீங்கள் வெளிநாட்டில் உங்களுடைய வேலையை திடீரென்று இழந்தால் நீங்களும் உங்கள் குடும்பமும் நடுத் தெருவில் நிற்கவேண்ய ஒரு நிலையே இன்று தொடர்கிறது. மேலும் 1000 பிரசினைகளை நம்மகத்தே வைத்துக்கொண்டு தீர்வில்லாமல் , நமக்காக பேசும் ஒரு சக்தி இல்லாமல்தடுமாரிக்கொண்டிருக்கிறோம். நமக்கென ஒரு குரல் இருந்திருந்தால் றிசானா ரபீக்கை காப்பாற்றி இருக்கலாம். எனவே ஒன்று படுவோம் .
இன மத பிரதேச பேதங்கள் மறந்து வெளிநாடு வாழ் இலங்கை மக்கள் மற்றும் அவர்களின் குடும்பமும் நண்பர்களும் என்கின்ற ஒரு குடையின் கீழ யாவரும் இணைவோம் வாருங்கள். என்று ரகீப் ஜௌபார் அழைப்பு விடுத்தார்.