யதார்த்தம் எது ? – இலங்கையில் நல்லாட்சி சாத்தியமா ? ( வீடியோ )

 

சிபான் அப்துல் ஹமீட்
இலங்கையில் மாரி, கோடை காலங்களைப்போல் தேர்தல் காலங்களும் மாறி மாறி வருவதும்,  சமூகத்தின் அதியுச்ச அயோக்கியர்கள் ஆட்சிக்கட்டிலில் அமர்வதும், தேர்தல் விஞ்ஞாபனங்கள் சுண்டல் சுத்தும் காகிதமாய் மாறுவதும் இறுதியில் மக்களின அபிலாசைகள் மாத்திரம் என்றும் இளமையாக நிறைவேற்றப்படாது வாழ்வதும் வழக்கமாகி விட்டது.

இந்த போலி அரசியல் சக்கரத்தில் மாற்றுத்தீர்வு ஏதுமின்றி மக்கள் மீண்டும் வேதாளமும் விக்கிரமாதித்தனும் கதைபோல் வாக்குச்சாவடியில் கால்கடுக்க நிற்பது தலைவிதி என்றாகி விட்டது.
இன்று நல்லாட்சி என்ற ஒரு கற்பனை மக்கள் மனத்திரையில் ஓட்டப்படுகிறது. இஸ்லாமும் நல்லாட்சி பற்றித்தான் பேசுகிறது என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. இந்தக் களச்சூழலில் இலங்கையில் நல்லாட்சி சாத்தியமா? என்பதும், இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எத்திசை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விடயமாகும். இந்த கருத்தாடலை தூண்டும் ஒரு முயற்சியாக யதார்த்தம் எது?

நிகழ்ச்சியில் இரு கலந்துரையாடலை நாம் தயாரித்துள்ளோம். அதில் முதல் அங்கம் இலங்கையில் நல்லாட்சி சாத்தியமா என்ற தலைப்பையும், இரண்டாம் அங்கம் முஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் முஸ்லிம்களின் சரியான அரசியல் போராட்டம் எவ்வாறிருக்க வேண்டும்? என்பது குறித்தும் ஆராய்கிறது.