இன்று உலக ஆதிவாசிகள் தினம் !

imagesஆதிவாசிகளின் சுகாதார பாதுகாப்பு தொடர்பான சேவைகளை பெற்றுக் கொள்வதை விரிவுபடுத்துதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இம்முறை ஆதிவாசிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

உலக சனத்தொகையில் ஐந்து வீத பிரநிதிதித்துவத்தை கொண்டுள்ள ஆதிவாசிகள் சுமார் 4000 மொழிகளை பயன்படுத்த கூடியவர்களாக காணப்படுகின்றனர்.

உலகளாவிய ரீதியில் 70 நாடுகளில் 5000 இற்கும் அதிகமான ஆதிவாசிகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் குறிப்பிட்டுள்ளது.

வறுமை, இடப்பிரச்சினை மற்றும் போசனை குறைப்பாடு என்பன ஆதிவாசிகள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் எனவும் அந்த நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வேடுவர்களாக வாழும் ஆதிவாசிகள் உலக ஆதிவாசிகளுக்கு மத்தியில் முக்கிய இடம் வகிக்கின்றமை ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இலங்கை தீவில் ஆதிவாசிகளின் தலைவர் ஊருவருகே வன்னிலா வேடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நாள் அனைத்து ஆதிவாசிகளுக்கும் சகல சௌபாக்கியமும் பெற்றுக் கொள்ளகூடிய நாளாக அமைய வேண்டும் என இலங்கை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவருகே வன்னிலா வேடுவர் குறிப்பிட்டுள்ளார்.