ரக்பி வீரர் தாஜுதீனின் சடலத்தை தோண்டுவதன் மூலம் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை மழுங்கடிக்கின்றனர். இஸ்லாமிய வழக்கத்தின் படி புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுக்கக் கூடாது.முஸ்லிம்களின் கோட் பாட்டை மீறும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதை முஸ்லிம்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா கேள்வி எழுப்பினார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான வகையில் தமது செயற்பாடுகளை செய்து வருகின்றது. முஸ்லிம்களின் நம்பிக்கைகளை உடைக்கும் வகையில் செயற்படுகின்றது. ரக்பி வீரர் தாஜ்தீனின் சடலத்தை தோண்டுவதன் மூலம் முஸ்லிம்களின் மத நம்பிக்கையை மழுங்கடிக்கின்றனர்.
இஸ்லாமிய வழக்கத்தின் படி புதைத்த உடலை மீண்டும் தோண்டி எடுக்கக் கூடாது. அவ்வாறு செயற்படுவது அவர்களின் மார்க்கத்தில் ஹராம் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் முஸ்லிம்களின் கோட்பாட்டை மீறும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுவதை முஸ்லிம்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப் போகின்றீர்கள் என கேள்வி எழுப்பினார்.