கல்முனையில் நவீன பஸ் தரிப்பிடம்; அமானா வங்கியுடன் மாநகர சபை ஒப்பந்தம்!

Amana (1)_Fotorஅஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபா  செலவில் நவீன பஸ் தரிப்பிடங்களை அமைப்பதற்கு அமானா வங்கி முன்வந்துள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக மேற்படி வேலைத் திட்டத்திற்காக  அமானா வங்கியும் கல்முனை மாநகர சபையும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில்  கைச்சாத்திட்டுள்ளன.
இவ்வொப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் அமானா வங்கியின் கொழும்பு தலைமையகத்தில் இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் சார்பில் முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் மற்றும் ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆகியோரும் அமானா வங்கியின் சார்பில் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி முஹம்மட் அஸ்மீர் அவர்களும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்..
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய சதுக்கத்தில் 2.5 மில்லியன் ரூபா செலவில் இரண்டு பஸ் தர்ப்பிடங்க்களை நவீன முறையில் நிர்மாணிக்கப்படவிருப்பதுடன் அவற்றை 15 வருட காலத்திற்கு பராமரிப்பதற்கான செலவையும் அமானா வங்கி பொறுப்பேற்றுள்ளது.
அத்துடன் இந்த ஐக்கிய சதுக்கத்தில் வாகனங்களில் இருந்தவாறே பயணிகள்  பணப் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக  Drive Through ATM ஒன்றை அமைப்பதற்கும் அமானா வங்கி முன்வந்துள்ளது. 
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் பதில் சட்ட அதிகாரி எம்.பி.எம்.பௌசான், முதல்வரின் விசேட ஆலோசகர் லியாகத் அபூபக்கர் ஆகியோரும் அமானா வங்கியின் உயர் அதிகாரிகளான சித்தீக் அக்பர், எம்.ஹலால்டீன், எம்.எம்.எஸ்.குவால்டீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
 
 Amana (2)_Fotor Amana (3)_Fotor