எம். பௌசர்
எனது இந்தக் குறிப்புகள் முஸ்லிம்களின் அரசியல் ,சமூக விடுதலைக்காக அரசியலில் இன்னமும் இருக்கிறோம் என சொல்லி வருகின்ற எந்த முஸ்லிம் கட்சிகளின் மீதான அரசியல் விமர்சனமல்ல. நான் இங்கு பேச விரும்புவது இலங்கையில் முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் போக்குகளும் அது கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்ற அரசியல் திசைவழி குறித்து மட்டுமே. கட்சி ஆதரவு நிலைப்பாடு ,தலைமைத்துவ விசுவாசம், சொந்த நலன்கள் என்பனவற்றிற்கு வெளியில் நின்று ஒரு கணம் சிந்திப்பதற்கான வாய்ப்பையும் கேள்விகளையும் பொது மக்களிடம் உருவாக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2015ம் ஆண்டின் பொதுத் தேர்தல், இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியலை குழி தோண்டிப் புதைத்துவிட்டு பேரினவாத கட்சிகளிடம் முஸ்லிம் மக்களை கூட்டிக் கொடுக்கும் அரசியல் வியாபாரத்தின் அபத்தமான சூழ்நிலையை உருவாக்கி விட்டுள்ளது என்று சொல்வது மிகையானதல்ல . முஸ்லிம்களுக்கு தனித்த அரசியல் கட்சிகள்/ இயக்கங்கள் ஏன் அவசியம்? முஸ்லிம்கள் வெறுமனே முஸ்லிம் பெயர் தாங்கியுள்ள கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? இந்த முஸ்லிம் கட்சிகள் உண்மையில் முஸ்லிம்களின் நலனிலும் அரசியல் சமூகப் பாதுகாப்பிலும் கொள்கைப்பற்று கொண்டவர்களா? எனும் கேள்விகள் இன்று எந்த அளவு முக்கியத்துவமானதாக இருக்கிறதோ அதே போல் முஸ்லிம்களின் தனித்துவ அரசியலின் உருவாக்க காலகட்டத்தின் அரசியல் தேவை எதுவாக இருந்தது? எந்த நோக்கத்தினை முன்நிறுத்தி இலங்கையின் தனித்துவ முஸ்லிம் அரசியல் போக�¯!
�கு மேற்கிளம்பி வந்தது என்கிற கேள்விகளும் அரசியல் வரலாற்றின் உண்மைகளும் மீளவும் இன்றும் நமக்கு முக்கியத்துவமானதாக மாறி இருக்கிறது.
முஸ்லிம்களின் தனித்த அரசியல் பாதை புறப்பட்ட கதையையும் அதன் வரலாற்றுத் தேவையையும் பார்ப்போமானால் கொஞ்சம் நாம் காலத்தினை பின்னோக்கிப் பார்த்து அதில் “நனவிடை தோய்தல்” வேண்டும். 1985ம் ஆண்டு காலகட்டத்தில் இந்த முஸ்லிம் தனித்துவ அரசியலுக்காக உழைத்து, தம்மை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் இரத்தமும் சதையுமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அரசியல் ஆறு இன்று பின்னோக்கிப் பாய்ந்து , அன்று எந்த அரசியல் போக்கை நிராகரித்து தனித்துவப் பாதை போட்டு பயணம் தொடங்கினோமோ , அந்த பயணத்தினை வழி நாடாத்தியர்களாலேயே மீண்டும் பேரினவாத கட்சிகளிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டிருக்கிறோம் என்பது நமக்கு எவ்வளவு பெரிய தோல்வியை தந்திருக்கிறது என்பதை உணர்வதும் அதுபற்றிய அரசியல் தெளிவைப் பெறுவதும் முக்கியமானது என எண்ணுகின்ற பிரிவினருடன் , அவர�¯!
�களின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக நின்று சில விடயங்களை பேச வேண்டுமென என நம்புகிறேன். இன்றைய இந்த சிதைவு நிலையை முஸ்லிம் தனித்துவ அரசியலில் நம்பிக்கை கொண்ட மக்கள் பிரிவினர் மத்தியில் அதிக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான அரசியல் அம்சமாக எடுத்து ஆழமாக விவாதிக்கப்படுவது மிக அவசியமானதாக மாறி விட்டுள்ளதை இந்த பொதுத்தேர்தல் நம் கண் முன் ஏற்படுத்தி விட்டுள்ளதை காண்கிறோம்
முஸ்லிம் தனித்துவ அரசியலின் உருவாக்கம்
1977ம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகள் இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களையும் , வறிய கிராமப்புற மக்களையும் மிக மோசமாகப் பாதித்தது. சிறுபான்மை மக்கள் விரோத கொள்கைகளை காணி, கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் ஐக்கிய தேசியக் கட்சி துல்லியமாகப் பிரயோகித்தது. பண்டாரநாயக்க போன்ற சிங்கள தேசியவாதிகளின் சிங்களக் குடியேற்றம் , சிங்கள மொழிக்கொள்கைகளை அப்படியே ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தது. இதனால் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டதைப் போன்றே வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.
அக்காலகட்டத்தில் இப்பிராந்தியத்தில் ஐக்கிய தேசியக்கட்சியிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் இருந்தனர். சம்மாந்துறை அப்துல் மஜீத், கல்முனை மன்சூர், ஏறாவூர் பரீத் மீராலெப்பை, மூதூர் மஜீத் , திருமலை மஹ்ரூப் போன்றவர்கள் தாம் அங்கம் வகிக்கும் அரசாங்கத்திற்கு ஊடாக முஸ்லிம் மக்களுக்கு அபிவிருத்தி, வேலைவாய்ப்பு மற்றும் சிறிய முன்னேற்றங்களை பெற்றுக் கொடுக்க கூடியவர்களாக இருந்தார்களே தவிர ,இப்பிராந்தியங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களின் அரசியல் சமூக உரிமைகளை பேரினவாத கட்சிகளிடம் தட்டிக் கேட்கும் குரலற்ற பிரதிநிதிகளாக இருந்தார்கள். இதனால் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக பேரினவாதத் தலைமைகளுடன் அரசியல் போராட்டத்தினை நடாத்தக் கூடிய தனித்துவ முஸ்லிம் தலைமையும், அதற்கான அரசியல் இயக்கத்தின் தேவையும் உணர!
ப்பட்டது.
அன்று கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் ஆழமாகக் காலூன்றி இருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஒரளவு செல்வாக்குப் பெற்றிருந்த சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கும் அதன் அரசியல் பிரதி நிதித்துவத்திற்கும் எதிராகவே இலங்கை முஸ்லிம்களின் தனித்துவ அரசியல் தொடங்கியது. அந்த அரசியல் அன்று அதிகாரத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை பிரதான அரசியல் எதிரியாக காட்டியது. 1987 ஜுலை மாதம் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கும் இந்தியாவுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கை முஸ்லிம் தனித்துவ அரசியலை மேலும் அடுத்தகட்டத்திற்கு முன் நகர்த்தியதுடன் ஐக்கிய தேசியக்கட்சி மீதான எதிர்ப்புணர்வை மேலும் ஆழப்படுத்தியது. வடக்கு கிழக்கினை இணைத்ததன் வழியாக வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களின் அரசியல், சமூக இருப்பினையும் பாதுகாப்பினையும் காவு கொண்டதாக அரசிய�®!
�் ரீதியாக நம்பிய இப்பிராந்தியங்களில் வாழும் பெரும்பான்மை முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக்கட்சியை நிராகரித்தார்கள். ஒப்பீட்டளவில் தனிப்பட்ட வகையில் மிக நல்ல மனிதர்களாக இருந்த அன்றைய பேரினவாதக் கட்சிகளில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகளாக்கப்பட்டதுடன், இந்த நல்ல மனிதர்கள் தீண்டத்தகாதவர்களாக்கப்பட்டு சமூக செல்வாக்கு தளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார்கள்.
சமாந்திரமாக 1985க்குப்பின் தமிழ் ஆயுத இயக்கங்களின் நடவடிக்கைகள் வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களை பாதிக்கத் தொடங்கியது. இப்பிராந்தியத்தில் வாழும் முஸ்லிம்கள் பாதுகாப்பில்லாத நிலைக்கு படிப்படியாகத் தள்ளப்படத் தொடங்கினர் . தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கு தமிழர்கள் தலைமை தாங்குவதும் தமக்கான அரசியல்கட்சிகள்/ இயக்கங்களைக் கொண்டிருப்பது போன்று வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்களையும் அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்கும் அவர்களது அபிலாசைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் தனித்துவமான முஸ்லிம் அரசியலும் அதற்கான கட்சியும் தேவைப்பட்டது. இந்தப் போக்கின் விளைவாக தமது சொந்தப் பிரதிநிதிகளாக பேரினவாத கட்சிகளில் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் மக்களால் தோற்கடிக்கப்பட்டதுடன், பேரினவாத அரசியல் கட்சிகளும் முஸ்லிம் பிரதேசங்க!
ளிலிருந்து மங்கி வலுவிழக்க வைக்கப்பட்டது.
1981 இல் சமூக இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1986இல் அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டு 1988இல் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்டு 1989ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத்தில் 4 பிரதி நிதிகளையும் பெற்றுக் கொண்டது. இந்தக் கட்சி முஸ்லிம் தனித்துவ அரசியலின் தலைமைப் பாத்திரத்தினை வகிக்கத் தொடங்கியது. 1980 தொடக்கம் 1990 வரையான ஒரு தசாப்தகால முஸ்லிம் தனித்துவ அரசியலின் சுருக்கமான வரிகள் இவை.
பின்னான முஸ்லிம் காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் மரணத்தின் பின் முஸ்லிம் காங்கிரஸ் பல கட்சிகளாப் பிரிந்தது. காங்கிரஸ் எனும் தாய் இயக்கத்தின் பெயரின் ஒரு பகுதியைத் தாங்கியும் , அஷ்ரப் அவர்களின் நிழற்படத்தை வைத்தும் ரிசாத் பதியுதீன் , அதாஉல்லாஹ் போன்றோர் தனிக்கட்சிகளை உருவாக்கினர். ஒரு தேசிய தனித்துவ அரசியல் இயக்கத்தின் பலத்தினை உணர்ந்ததும் , அதன் பின்னால் திரண்டு நின்ற மக்கள் சக்தியின் வலிமையையும் இவர்கள் உணர்ந்திருந்தனர். காங்கிரஸ் என்ற பெயரை தாங்க மறுத்தவர்களும், தேசியக் கட்சிகளில் போய் சேர்ந்தவர்களும் காணாமல் போயினர். ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அதாஉல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் என்பன கலைக்கப்பட்ட பாராளுமன்றம் வரை பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்ததுடன் அரசியல�¯!
தலைமைகளாவும் இருந்து வருகின்றனர். இவர்கள் முஸ்லிம் மக்களின் நலனும் உரிமையும் காப்பதே தமது இலட்சியம் என்கின்றனர். தமக்கு வாக்களிப்பதன் ஊடாகவே முஸ்லிம் சமூகத்திற்கு விடிவு என்கின்றனர். அதிகாரத்தினை அடைந்து கொள்வதற்காக மக்களை கூறு போடுகின்றனர். ஒருவரை ஒருவர் தோற்கடிப்பதே தமது அபிலாசை என சொல்வதை வசதியாக மறைத்து, சமூக, மக்கள் அபிலாசைகளாக திரித்து பொது மக்களை நம்ப வைத்தும் வருகின்றனர். எந்த நோக்கத்திற்காக முஸ்லிம் தனித்துவ அரசியல் உருவாக்கம் கொண்டதோ அந்த நோக்கிலிருந்து தடம் மாறி , ஒடுக்குமுறை பண்புகளைக் கொண்ட பேரினவாத அரசியல் தலைமைகளை அதிகாரத்திற்கு கொண்டு வரும் உள்ளூர் தரகர்களாக இந்தக் கட்சித் தலைவர்கள் மாறி விட்டனர்.
ஒரு சாரார் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தும், இன்னுமொரு சாரார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சார்ந்தும் தமது சொந்த அரசியல் வாழ்வை திட்டமிடுகின்றனர். இதற்காக, ஒரு தனித்துவ அரசியல் பாதையில் புறப்பட்ட மக்களை கட்சிகளின் பெயரினைப் பயன்படுத்தியும், அம்மக்களின் உண்மையான அரசியல் உணர்வினை கபடத்தனமாக ஏமாற்றியும் வருகின்றனர். பெறப்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை வைத்து மாறி மாறி அதிகாரத்திற்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமோ முஸ்லிம் சமூகத்தின் மீதான அரச ஒடுக்குமுறையின் கொள்கையிலோ செயற்பாட்டிலோ எந்த மாற்றத்தினையும் இவர்களால் கொண்டுவர முடியவில்லை.
ஒரு சாரார் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் மீது நடைபெற்ற ஒடுக்குதலை மறைக்க முற்படுகின்றனர். இன்னொரு சாரார் மகிந்தவின் காலத்தில் நடந்ததை திரிபடைய வைக்கப் பார்க்கின்றனர். அதற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என நிறுவப் பார்க்கின்றனர். மகிந்தவின் ஆட்சியில் இறுதிவரை மேற்சொன்ன மூன்று கட்சித்தலைமைகளும் அமைச்சர்களாக இருந்து, முண்டு கொடுத்துக் கொண்டிருந்ததை அப்பாவி முஸ்லிம் மக்களின் அரசியல் பலவீனத்தால், தாம் தப்பித்து விட்டோம் என நினைக்கின்றனர்.
இன்றைய தேர்தல் கூட்டுகள்
உலகிலெங்குமே நிகழாத அரசியல் அபத்த நாடகமொன்று வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களிடம் காட்சிக்கு வந்திருக்கிறது .அதாஉல்லாஹ்.ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் மகிந்தவின் இருப்பும் செல்வாக்கும் நாளுக்கு நாள் அசைக்க முடியாது வலுப் பெற்றுவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமை தாங்கும் கூட்டு முன்னணியில் தேர்தல் கேட்கின்றனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் தேர்தல் கேட்கின்றனர். ஒரு மாவட்டத்தில் தனியாகவும், இன்னுமொரு மாவட்டத்தில் பிரிந்தும், மற்றுமொரு மாவட்டத்தில் அனைவரும் ஒன்றாகவும் தேர்தல் கேட்கின்றனர்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமைகளுக்கு தேசியத் தலைமை ஐக்கிய தேசியக் கட்சியும் ரணில் விக்கிரமசிங்கவும்தான். இதில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை. ஆனால் வடக்கு கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில் வாக்காளர்களாகிய முஸ்லிம்கள் சில மாவட்டங்களில் யானைக்கு புள்ளடி போட வேண்டும் , சில மாவட்டங்களில் யானைக்கும் மயிலுக்கும் புள்ளடி போடுவது துரோகம் மரத்திற்கு போடவேண்டும், சில மாவட்டங்களில் யானைக்கும் மரத்திற்கும் புள்ளடி போடுவது துரோகம் மயிலுக்கு புள்ளடு போடவேண்டும், திருமலை போன்ற மாவட்டத்திலும், இந்த இரு கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கேட்கும் வடக்கு கிழக்குக்கு வெளியேயான மாவட்டங்களில் யானைக்கு மட்டும் போட வேண்டும் . அதாஉல்லா, ஹிஸ்புல்லா போன்றவர்கள் வெற்றிலைக்கு மட்டும் போட வேண்டும். இந்த பேரினவ�®!
�த சார்பு அரசியல் தனித்துவ முஸ்லிம் அரசியலை, முஸ்லிம்களுக்கான தேசிய அரசியல் இயக்கத்தினை எங்கு கொண்டு வந்து இப்போது நிறுத்தி இருக்கிறது என்பதனை மதிப்பிடுவதற்கு இதனை விட அரசியல் ஆதாரம் வேறு ஏதாவது தேவையாக இருக்கிறதா அன்பான முஸ்லிம் மக்களே!
எந்த முஸ்லிம் அரசியல் கட்சிக்கும் உறுதியான கொள்கைகளை முன் வைத்து முஸ்லிம் மக்களை அணி திரட்டி ஜே.வி. பி போன்று ஐக்கிய தேசியக் கட்சியையோ, சிறிலங்கா சுதந்திரக் கட்சியையோ ஆதர்சனமாகக் காட்டாது தனித்துவமாக இந்த தேர்தலை முகம் கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சமாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்றாவது ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு தலைமை தாங்குகின்ற கட்சிகளின் அரசியல் பண்புடன் தேர்தல் கோரிக்கையை அரசியல் கோரிக்கையாக்கி மக்கள் ஆணை பெறுவதற்கும் அதனை மைய அரசியலை நோக்கிய அழுத்தமாக மாற்றுவதற்கும் தனித்து வடக்கு கிழக்கில் தேர்தலில் போட்டியிடுவற்கு முடியவில்லை. இதுதான் உண்மையென்றால் தனித்துவ அரசியல், தேசிய அரசியல் இயக்கம், போன்ற கதையாடல்களுக்கு இன்னும் அர்த்தம் உள்ளதா?
அன்று இந்த ஐக்கிய தேசியக் கட்சியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் நிராகரித்து தனித்துவ அரசியலின் தேவையை முன் நிறுத்தி எழுந்த ஒரு அரசியல் எழுச்சி ,சிதைவடைந்து கூர்மங்கி ஒடுக்குவோரை தலைமையாக ஏற்று சரணாகதி அடைந்த தோல்வியின் ஒரு பகுதி விளைவு இது. இந்த ஏமாற்ற மிகு தோல்வியின் கண்ணீரிலிருந்து முஸ்லிம் தனித்துவ அரசியல் மீள உயிர்ப்பிக்குமா என்பதை சமூக சக்திகள்தான் சொல்தல் வேண்டும். அரசியல் அறிவுள்ள, சமூக விடுதலையை முன்னிருத்தி திரச்சியுற்ற ஒரு மக்கள் பிரிவினர் மத்தியில் மிக இலேசாக இப்படி ஒரு மோசடி நாடகத்தினை நடாத்த முடியுமாக இருப்பின் ஒன்று இந்த மக்கள் மிகப் பலவினமான அரசியல் அறிவு நிலையில் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும் அல்லது ஏமாற்றும் இந்த தலைமைகள் பலே கில்லாடிகளாக உள்ளனர் என்ற முடிவுக்கு வர வேண்டும். முஸ்லிம் வாக்காளர்!
களே உங்களிடம் ஒரு கேள்வியும் இல்லையா? . அரசியல் என்பது வெறும் உணர்ச்சிமட்டுமல்ல அதில் அறிவும் தார்மீக ஆவேசமும் சரியினை, தவறினை பகுத்தறியும் நுட்பமும் உள்ளது என்பதை நாம் இன்னும் அறிந்து கொள்ளவில்லையா? நாம் எல்லோருமே சேர்ந்து முஸ்லிம் தனித்துவ அரசியலை குழி தோண்டிப் புதைத்து கபுறை மூடி விட்டு வந்து விட்டோமா?
இறைவா எதிரிகளை நான் பார்த்துக் கொள்வேன், நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று என்கிற ஒரு அர்த்தமுள்ள வாசகம் உள்ளது. இன்றைய முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரை சமூகத்திற்கு வெளியிலிருந்து வருகின்ற ஒடுக்குமுறையையும் எதிர் நிலைப்பாட்டையும் முகம் கொள்ள முஸ்லிம் சமூகம் தயாராக உள்ளது, ஆனால் சமூகத்தினை காப்பாற்றப் போகிறோம் எனச் சொல்லும் இந்த ஏமாற்றமிகு தலைமைகளிடமிருந்து சமூகத்தினை காப்பாற்ற நாம் இறைவனைத்தான் துணைக்கு அழைக்க வேண்டியுள்ளதுடன், முஸ்லிம் சிவில் சமூக மட்டத்தில் கோட்பாட்டு ரீதியான அரசியல் முன்னெடுப்பினையும் அரசியல் மயப்படுத்தலையும் கட்சி நலன்களுக்கு வெளியே நின்று சமூக சக்திகள் முன்னெடுக்க வேண்டி தேவையுமுள்ளது.