உபவேந்தர் இஸ்மாயில் முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றினை கூறுவது நகைச் சுவையான விடயமாகும்., வேட்பாளர் மன்சூர்

 

அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசின் கோட்டைகளுக்குள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் முக்கிய புள்ளிகளை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளமையினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

மன்சூர்:-  தேசிய ரீதியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்ற நன்மதிப்ப்பினை இல்லாதொழிக்கும் முகமாகவே அகில இலங்கை மக்கள் காங்கிரசானது அம்பாறையில் ஊடுறுவி இருக்கின்ற விடயத்தினை பார்க்கின்றேன். அத்தோடு உறுவாக்கப்பட போகின்ற நல்லாட்சியுடான புதிய பராளுமன்றத்தில் அதிகப்படியான ஆசனங்களுடன் பேரம்பேசக்கூட சக்தியாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலே தலைவர் ரவூப் ஹக்கீம் தனது வியூகங்களை அமைத்துள்ளார் அதனை முற்றிலும் முறியடித்து முஸ்லிம் சமூகத்தின் அரசியல் அபிலாசைகளை கேளிவிக்குறியாக்கும் செயலாகவும் இந்த ஊடுறுவளை நான் பார்க்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- மாவாட்டத்தில் அதிக வாக்குகளை வைத்திருக்கும் சம்மாந்துறைத் தொகுதியானது அன்மைக்காலமாக பிரதி நித்தித்துவத்தை இழந்து வருக்கின்றமைக்கு சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் காரணம் என குற்றம்சாட்டப்படுக்கின்றதே?

மன்சூர்:-  கடந்த காலங்களில் கல்முனைதொகுதியானது பிரதிநிதிதுவத்தினை தக்கவைத்து வருக்கின்ற அதேவேலையில் கட்சியின் செயலாளர் நாயகம் என்ற ரீதியில் நிந்தவூர் பிரதேசத்தினை மையப்படுத்தி ஹசன் அலிக்கு தேசியப்பட்டியில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் பொத்துவில் தொகுதியில் உள்ள அக்கறைப்பற்றினை சேர்ந்த அதாவுல்லா பிரதேசவாதத்தினை உறுவாக்கி தனக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்ற முடிவினை எடுத்தினாலும் சம்மாந்துறையினை சேர்ந்தவர்கள் அதாவுல்லாக்கு வாக்களித்ததமையினாலுமே சம்மாந்துறைக்கான பிரதிநிதிதுவம் இழக்கப்பட்டிருந்தது.

அஹமட் இர்ஸாட்:- பெரும்தலைவர் அஸ்ரப் அவர்களுடைய சொந்த தொகுதியினை பிரதிநிதித்துவப் படுத்துக்கின்றவரும், தனக்கு அமைச்சுப்பதவி வழங்கப்படும் என்ற நம்மிக்கையுடன் இருந்தவருமான முன்னாள் பாராளுமன்ற உரூப்பினர் ஹரிசுக்கு ஏன் இதுவரை காலமும் அமைச்சுபதவி வழங்கப்படவில்லை? 

மன்சூர்:- பாராளுமன்ற ஊறுப்பினர்களுக்கெல்லாம் அமைச்சுப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதில் எந்தளவு நியாயம் இருக்கின்றது என தனக்கு தெரியவில்லை. ஆனால் தனக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டால் மக்களுக்கு சேவையினை செய்ய முடியும் என்ற ஹரீசினுடைய எதிர்பார்ப்பானது நியாயமானது என்பதில் மாற்றுக்கருத்திலை. எதிர்காலத்தில் அவருக்கு இன்சா அல்லாஹ் அமைச்சுப்பதவியானது வழங்கப்படலாம்.

அஹமட் இர்ஸாட்:- கடந்த நோன்பு பெருநாள் தினத்தினை ஒட்டிய நாட்களில் உங்களுடைய கட்சியின் தலைவர் மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களுக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த வேலையில் போதிய வரவேற்பு கொடுக்கப்படாமைக்கான காரணம் என்ன?

மன்சூர்:-  அவ்வாறு நீங்கள் கூறும் அளவிற்கு தலைக்கு எதிரானா கோசங்களோ அல்லது கொந்தளிப்புக்களோ இடம்பெற்றதாக தனக்கு எந்த தகவலும் கிடக்கவில்லை. அவ்வாறான நிலைமை சாய்ந்தமருதில் மட்டுமே காணக்கூடியதாக இருந்தது.போராளிகள் மத்தியில் இருக்கின்ற கருத்துக்களை தெரிவிக்கின்ற பொழுது ஏற்படுக்கின்ற சாதாரனமான கருத்து முரண்பாடுகளை ஊடகங்கலை திரிவுபடுத்தி எழுதுகின்றன.

அஹமட் இர்ஸாட்:- சுகாதார அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அதிகளவான அபிவிருத்தி நடவடிக்கைகளை செய்த நீங்கள் ஏன் அதேதரத்தில் உள்ள வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு தாதிமார்களின் பற்றாக்குறை, வைத்தியர்களின் பற்றக்குறை, சவச்சாளையின் குளிரூட்டி பழுதடைந்து காணப்படல் தேவைகளை தேவைகள் இன்னும் பூர்த்திசெய்து கொடுக்கவில்லை?

மன்சூர்:- வாழைச்சேனை வைத்தியசாலையினை மட்டும் குறிப்பிட்டு கூறமுடியாது. ஆளணி பற்றாக்குறை, வைத்தியர்களின் பற்றாக்குறையனது இலங்கையில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் காணப்படும் குறைபாடாகும். இங்கு முக்கியமாக குறிப்பிடப்படவேண்டிய விடயமாக நான் பார்ப்பது இலங்கையில் மிக நிண்ட காலமாக எல்லா அரசங்கங்களும் சுகாதார சேவையினை முற்றிலும் இலவசமாக வழங்கிவருவதினால் இவ்வாறான வளப்பற்றாக் குறைக்கு சில வைத்தியசாலைகள் தள்ளப்பட்டுவிடுக்கின்றன. நான் அமைச்சராக இருந்த காலத்தில் என்னால் முடிந்த சேவைகளை செய்துள்ள அதே நிலையில் நீங்கள் குறிப்பிடதனைப் போன்று வாழைச்சேனை வைத்தியசாலையிலும் ஏறாவூர் வைத்தியசாலையிலும் பல குறைபாடுகள் காணப்படுக்கின்றன. வருக்கின்ற ஆகஸ்ட் மாதமளவில் மத்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல முன்னெடுப்புக்களை எடுக்க தீர்மானித்துள்ளோம்.

அஹமட் இர்ஸாட்:- தனக்கென ஒரு வாக்குவங்கியினை வைத்திருக்கும் சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நெளசான் மஜீட்டினுடைய ஆதரவு உங்களுக்கா அல்லது உங்களை எதிர்த்து போட்டியிடுக்கின்ற முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலின் பக்கமா உள்ளது?

மன்சூர்:- நீங்கள் குறிப்பிட்டதைப் போன்ற நெளசாட் மஜீட்டுக்கு இருக்கும் ஆதரவானது அவரினால் உறுவாக்கப்பட்டதல்ல. காலாகாலமாக அவருடை மாமனாரான முன்னாள் பாராளுமன்ர உறுப்பினர் அப்துல் மஜீட்டினால் உறுவாக்கப்படதாகும். அந்த வகையிலிலே அவருடைய ஆதரவாளர்கள் கடந்த தேர்தல்களில் வாக்களித்தும் பிரதிநிதித்துவத்தினை பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது என்ற விரக்தியில் இருந்து வருக்கின்றனர். அதே போன்று நெளசாட் அவர்களும் சம்மாந்துறைக்கு இம்முறை பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தேர்தலில் களமிறங்காமல் பாரிய கைங்கரியத்தினை சம்மாந்துறை மக்களுக்காக செய்துள்ளமையினையிட்டு அவரை பாரட்டுகின்ற அதேவேலையில் அவருடைய ஆதரவாளர்களும் எங்களுக்கு ஆதரவளிக்கும் முடிவினை எடுத்துள்ளார்கள்.

அஹமட் இர்ஸாட்:- மூன்று தொகுதிகளிலும் களமிறக்கப்பட்டுள்ள சீறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வேட்பாளர்களாகிய நீங்கள் மூவரும் வெற்றி பெறுவீர்களா? அல்லது ஒருத்தருக் கொருத்தர் விட்டுகொடுப்புச் செய்வீர்களா?

மன்சூர்:- ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுகின்ற ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் எனக்கும் இடையில் எவ்விதமான போட்டியும் கிடையாது. இது மூவரும் இணைந்து ஒருமித்து பயணிக்கின்ற போட்டியே அன்றி இது ஒரு மும்முனை போட்டி அல்ல என்பதனை தெரிவித்துக் கொள்வதோடு மூவருமே வெற்றிபெற்றுக் கொள்ளும் வகையிலேயெ எங்களுடைய வியூகம் அமைக்கப்பட்டுள்ளது.

அஹமட் இர்ஸாட்:- தொடர்ந் தேர்ச்சியாக உங்களுடைய கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தலைமையானது தேசியப்பட்டியல் வழங்கி வருகின்றமைக்கு பல விமர்சனங்கள் எழுகின்றமை சம்பந்தமாக நீங்கள் என்ன கருத்துடன் இருக்கின்றீர்கள்?

மன்சூர்:- பாரிய கட்சிகளாக இருக்கின்ற தேசியக் கட்சிகளும் செயலாளர் நாயகத்திற்கு இவ்வாறான தேசியப்பட்டியலினை தொடர்ந் தேர்ச்சியாக வழங்கி வருக்கின்றமையினை நாங்கள் சர்வசாதாரணமான விடயமாக அரசியலிலே காணக்குடியதாக இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் பெரும்தலைவர் அச்ரஃப்புடனே இருந்து கட்சியின் செயலாளர் நாயகம் நீண்ட காலமாக தனது பணியின் செய்து வருகின்றமையினால்கட்சியின் தலைமையானது குறிப்பிட்ட பதவியினை கொடுத்து வருக்கின்றமை பாரதூரமான விடயமாக தென்படவில்லை.

அஹமட் இர்ஸாட்:-சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமைப் பொறுப்பினை ரவூப் ஹக்கீம் பொறுப்பெடுத்தற்கு பிற்பாடே பிரதேசவாதம் தலைதூக்கியதாக உங்களுக்கு எதிராக போட்டியிருகின்ற முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில் என்னுடனான நேர்காணலின் பொழுது தெரிவித்திருந்த கருத்தினை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

மன்சூர்:- பிரதேசவாதம் என்பது பெரும்தலைவரின் காலத்திலிருந்தே இருந்து வருக்கின்ற விடயமாகும். பெரும் தலைவர் கூட பிரதேசவாதத்தினை ஒழிக்க வேண்டும் என ஒவ்வொரு மேடைகளிலும் பேசுக்கின்ற விடயமாக அன்று பிரதேசவாதம் எனும் சொல் காணப்பட்டது. ஆகையால் ரவூப் ஹக்கீமின் வருகைக்கு பிற்பாடுதன் பிரதேசவாதம் தலைதூக்கியது என்பதில் எனக்கு உடன்பாடில்லை. அத்தோடு கட்சியின் வரலாறு குறித்து உபவேந்தர் இஸ்மாயில் கருத்து கூறுகின்றமையானது நகைப்புக்குறிய விடயமாகவே பார்க்கின்றேன்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய கரையோரமாவட்ட கோரிக்கையானது எந்தளவில் இருக்கின்றது?

மன்சூர்:- எங்களுடைய கரையோர மாவட்ட கோரிக்கையானது கட்சியில் கொள்கையளவில் இன்னும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. கடந்த அரசாங்கம் ஒரு இனவாத போக்கிலே சென்று கொண்டிருந்தமையினால் எங்களால் அவ்விடயத்தில் சாதித்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் தற்பொழுது ஜனாதிபதி மைத்திரிபாலவின் அதிகாரத்தின் கீழ் உறுவாக்கப்படும் நல்லாட்சியை கொண்ட ஐக்கியதேசியக் கட்சியின் கட்சியின் அரசாங்கத்துடன் எங்களின் கட்சியும் தலைமையும் கைரையோர மாவட்ட கோரிக்கை சம்பந்தமாக சிறந்த முடிவினை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுகிருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:- பெருந்தலைவர் அஸ்ரப் அவர்களுடைய காலத்திலிருந்து பட்டிபடியாக முன்னேறி இன்று வெற்றி பெறும் எதிர்பார்ப்புடன் பாராளுமன்ற தேர்தலிலும் கள்மிறங்கியுள்ள நீங்கள் உங்களுடையா பார்வையில் ரவூப் ஹக்கீமா அல்லது பெருந்தலைவர் அஸ்ரப்பா தலைமைதுவத்திற்கு சிறந்தவர்?

மன்சூர்:- இருவருமே தலைமைத்துவத்திற்கு சிறந்தவர்கள்தான்.

அஹமட் இர்ஸாட்:- சம்மாந்துறையின் அரசியல் வரலாற்றில் அரசியல்வாதிகளினால் செய்யமுடியாத அபிவிருத்தியினை தான் சம்மாந்துறைக்கு செய்ய வேண்டும் என எதை நினைக்கின்றீர்கள்?

மன்சூர்:- மர்ஹும்களான அப்துல் மஜீட், அன்வர் இஸ்மாயில், மொஹைடீன் போன்றவர்களெல்லாம் அவர்கள் வாழ்ந்தகாலத்தில் எவ்வாறான தேவைப்பாடுகள் காணப்பட்டனவோ அவைகளை அவர்களுக்கு இயலுமான முறையில் செய்து முடித்துள்ளார்கள். அதற்கு அப்பால் நான் பாராளுமன்ரத்திற்கு சென்றால் நீர்பாசனம் தொடர்பான விவசாயிக்கு தேவையான அபிவிருத்திகள் , பாதைகள், வெளியில் தொழில் நிமிர்த்தம் செல்லும் எமது யுவதிகளை கருத்தில் கொண்டு சம்மாந்துறை எல்லைக்குல் தொழில்பேட்டையினை ஆரம்பித்தல், 400மீற்றர் விளையாட்டுத் திடலினை ஆரம்பித்தல், மிகப்பெரும் குறையாக இருக்கின்ற பஸ்தரிப்பு நிலையம் போன்ற அபிவிருத்தி பணிகளை சம்மாந்துரைக்காக செய்ய மிகவிரைவில் செய்ய தீர்மாணிதுள்ளதோடு பொழுபோக்கிற்காக திற்ந்த வெளியரங்கு பூக்காவினையும் அமைக்க திட்டமிட்டுள்ளேன்.

அஹமட் இர்ஸாட்:- அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் காணிப்பிரச்சனைக்கான தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொடுக்கப் போகின்றீர்கள்?

மன்சூர்:- காணிப்பிரச்சனை என்பது கடந்த அரசாங்கத்திலே எழுப்பப்பட்ட பிரச்சனையாகும். ஆனால் தற்பொழுது எங்களுக்கு இந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இருக்கின்றது. வருகின்ற பொதுத்தேர்தலுக்கு பிற்பாடு இதற்கான முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுக்காலாம் என நம்புகின்றோம்.

அஹமட் இர்ஸாட்:- உங்களுடைய பிரதேசத்திலே தயாகமகேவின் சுவரொட்டிகளை காணக்கூடியதாக இருக்கின்றதே. இவ்வாறான செயற்படுகளினால் உங்களுடைய வெற்றிக்கு ஆபத்துக்கள் ஏற்படும் என நீங்கள் நினைக்கவில்லையா?

மன்சூர்:- ஜனநாயக நாட்டில் ஒருவருக்கு மாவட்டத்தில் எங்கு சென்றும் வாக்குகளை கேட்டுக்கொள்ள முடியும். அந்த வகையில் அவர்களுடைய ஊடுறுவளினை நாங்கள் தடுத்து நிறுத்த முடியாது. இருந்தும் ஒட்டுமொத்த முச்லிம்களின் இருப்பை பாதுகாக்கும் முகமாக சம்மாந்துறை பிரதேச மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும்.

அஹமட் இர்ஸாட்:- நீங்கள் சுகாதார அமைச்சராக இருந்த பொழுது  சம்மாந்துறை வைத்தியசாலைக்கு அபிவிருத்தி செய்ய முடியாத ஒன்றை உங்களுடைய பாராளுமன்ற வெற்றிக்கு பிற்பாடு செய்து விடலாம் என எதை நினைக்கின்றீர்கள்? 

மன்சூர்:- ஆம் முக்கியமான கேள்வியாக இதனை நான் நினைக்கின்றேன். மாகாண சபையின் கீழ் சம்மாந்துறை வைத்தியசாலையானது இருப்பதினால் அதிகப்படியான அபிவிருத்திகளை செய்ய முடிவதில்லை அந்தவகையிலே எனது பாராளுமன்ற அதிகாரம் கிடைக்குமானல் சம்மாந்துறை வைத்தியசாலையினை மத்திய அரசாங்கத்திற்குள் கொண்டுவந்து தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதே எனது திட்டமாகும்.

அஹமட் இர்ஸாட்:- வில்பத்து பிரச்சனை தொடர்பில் அமைச்சர் றிசாட் பதுடீன் அதிகமாக குரல் கொடுத்துவருக்கின்ற நிலையில் ஏன் நீங்களும் உங்களுடைய கட்சியும் மெளனித்து இருக்கின்றது.

மன்சூர்:- வில்பத்து பிரச்சனையினை பூதாகரமாக்கியும் அதற்கு சம்பந்தமில்லாத இடங்களிலெல்லாம் அதனை பேசியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்துகொள்ள விரும்பவில்லை. தேர்தலுக்கு முன் வாய்கிழிய பேசிய அமைச்சர் றிசாட் பதுர்டீன் தேர்தல் அறிவிக்கப்பட்டதற்கு பிற்பாடு விபத்து பிரச்சனை பற்றி பேசாமல் மெளனம் காத்துவருக்கின்றமையானது எங்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்திய விடயமாக இருக்கின்றது.

அஹமட் இர்ஸாட்:-கடைசியாக நீங்கள் பிரதி நிதித்துவப்படுத்தும் சம்மாந்துறை அம்பாறை மக்களுக்கு வருக்கின்ற பொதுத்தேர்தல் சம்பந்தமாக எதைக்கூற விரும்புக்கின்றீர்கள்?

மன்சூர்:- அனேகமான விடயங்களை நான் இப்பேட்டியிலேயே  எமது மக்களுக்கு கூறிவிட்டேன். இருந்தும் இந்த நாட்டில் புதிய தொரு நல்லாட்சியினை தழுவிய ஜானாதிபதியினை உறுவாக்குவதற்காக வாக்களித்த சம்மாந்துறை மக்கள் மீண்டும் அராஜக அரசாங்கத்தினை கையில் வைத்திருந்த மஹிந்த ராஜபஸ்ஸ பாராளுமன்ற நுளைவதற்கு எந்தவகையிலுமான ஒத்துளைப்புக்களையும் வழங்காமல், ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்துள்ள சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பதோடு, சிறீலங்கா முஸ்லிம் காஙிரஸ் போட்டியிடுகின்ற மூவருக்கும் வாக்களித்து மூவரும் பாராளுமன்ற கதிரையில் உட்காருவதற்கு ஒத்துளைக்குமாறு எனது மக்களை வேண்டிக்கொள்கின்றேன்.