ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுத்தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அலிஷாஹிர் மெளலானவை ஆதரித்து இடம்பெற்ற பிரச்சாரப் பொதுக் கூட்டம் ஏறாவூர் புன்னைக்குடா வீதி மெளலானா சதுக்கத்தில் இன்று மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.

ஏறாவூர் நகரமே வெடில் முழங்க ஏறாவூருக்கான வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உருப்பினரும் இன்றைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான செய்யத் அலிஷாஹிர் மெளலானாவை ஆதரித்து ஊர்வலமாக ஏறாவூர் புன்னைக்குடா வீதியால் பொதுக்கூட்ட மண்டபத்துக்கு அதிதிகள் சகிதம் அழைத்துச்செல்லப்பட்டனர்.
குறித்த பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் தலைவர் பொத்துவில், சாய்ந்தமருது, காத்தான்குடி ஆகிய இடங்களில் இடம்பெறும் பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்ள ஏறாவூர் கூட்ட மேடையில் இருந்து மாலை 5 மணிக்கு உலங்கு வானூர்த்தி மூலம்