வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால் அதிகரிக்குமாறு ரணில் கோரிக்கை

{"origin":"gallery","uid":"831D375F-AE88-459E-AAB2-86FE2E1A0056_1629369993907","source":"other"}

 நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

கோவிட் பெருந்தொற்று நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இவ்வாறு கோரியுள்ளார்.

நாட்டில் வென்டிலேட்டர்களின் எண்ணிக்கையை மேலும் இரண்டாயிரத்தினால் அதிகரிக்குமாறு அவர் கோரியுள்ளார். இதன் மூலம் கோவிட் புதிய பிறழ்வு வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளின் உயிர்களை பாதுகாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வென்டிலேட்டர்களின் அவசியம் பற்றி 2019ம் ஆண்டு தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை பிரகடனத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் சுட்டிக்காட்டிய நேரத்தில் வென்டிலேட்டர்களை அதிகரித்திருந்தால் இன்று பல உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.