நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் – பிரசன்ன ரணதுங்க

{"source":"other","uid":"5A9E8297-A05E-42F3-BB52-9FED29EDB2C7_1602182858573","origin":"gallery","fte_sources":["307909684028211"],"used_sources":"{"sources":[{"type":"ugc","id":"307909684028211"}],"version":1}","premium_sources":[],"is_remix":true}

தயவுசெய்து நாட்டை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தி சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், நாட்டை முடக்க முன் அன்றாடம் வருமானத்திற்காக உழைப்பவர்கள் பற்றி கவனம் செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், நாட்டை முடக்குவதாயின் சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவினரை தவிர்ந்த ஏனைய அனைத்து தரப்பினரின் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை அரசாங்கம் அறவிடவேண்டுமென அவர் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் இருந்து 75 சதவீத தொகையும், அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 50 சதவீதமும், சிறு தொழில் செய்யும் தொழிலாளர்களிடமிருந்து 30 சதவீதமும் அரசாங்கம் அறவிட வேண்டுமென அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.