சந்தோசத்தில் விமல் வீரவன்ச

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும், 5 லட்சம் ரூபா விதமான இரண்டு சரீர பிணைகளிலும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை விடுவிக்க கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவரது வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மகளின் உடல் நிலையை கருத்திற் கொண்டு இந்த பிணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக வீரவன்ச விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

வீரவன்சவுக்கு பல தடவைகள் பிணை வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்ட போதும், இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.