புதிய ஆட்சி மலராவிட்டால் ஏ.ஈ. குணசிங்க பாடசாலையின் சில பகுதிகள் வேறு என்.ஜி.ஓக்களுக்கு விற்கப்பட்டிருக்கும்:முஜிபு ரஹ்மான்

அஷ்ரப் ஏ சமத்

கொழும்பு குணசிங்க புரயில் உள்ள ஏ. ஈ. குணசிங்க வித்தியலாயத்திற்கு கொழும்பு  அபிவிருத்தி இனைத் தலைவரும்  பாரளுமன்ற உறுப்பிணருமான முஜிபு ரஹ்மான் அவா்களின் வேண்டுகோளின் பேரில்  அல் கபாலா நிறுவனம் 10 மில்லியன் ருபா செலவில் இப் பாடசாலைகள் புனர்நிா்மாணம் செய்யப்பட்டு  இன்று (16) திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மேல்மாகாண கல்வியமைசச்சா்  ரன்ஜித் சோமவன்ச. கலந்து கொண்டாா்.  கொழும்பு அபிவிருத்தித் இணைத் தலைவா் சட்டத்தரணி யு.எம். நஜீம், மேல்மாகாண சபை உறுப்பிணா்களான அர்சத் நிசாம்டீன், எம். பாயிஸ், பைருஸ் ஹாஜியாா்,  கல்லுாாி அதிபா் திருமதி ஆர்.எம். ரத்நாயக்க,  வலயக் கல்விப் பணிப்பளா் ஜயந்த விக்கிரமநாயக்க ஆகியோறும் கலந்து கொண்டனா். 

இந் நிகழ்வில் 1ஆம் தரத்திற்காக  முஸ்லீம் மாணவிகள் சிங்கள மொழி மூலம்  55 மாணவிகள் இன்று அனுமதிக்கப்பட்டனா். இக்கல்லுாாியில் 8 ஆசிரியா்களும், 180 மாணவிகளும் உள்ளனா். ஆண்டு 1 தொட்டு 11 ஆம் ஆண்டு வரை இங்கு கல்வி போதிக்கப்படுகின்றது.

 

கொழும்பின்   இதயமான  குணசிங்கபுரவில் தணியாா் பஸ் நிலையம் மற்றும்   , குணசிங்க புர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் செல்லும் பாதையில்  சகல வசதிகளையும் கொண்ட 1 ஏக்கா் நிலப்பரப்பில்  மிகவும் அமைதியான சூழ்நிலையில்    25 வகுப்பறைகளைக் கொண்ட ஏ. ஈ. குணசிங்க வித்தியாலயம் உள்ளது.  இங்கு  1000 மாணவா்கள் கற்கக் கூடிய வசதி வாய்ப்புக்கள் இங்கு உள்ளன.  

 இப் பாடசாலை முன்னாள்  ஜனாதிபதி ஆர் பிரேமதாச வின் முயற்றிசியினால்  35 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. . அதன் பின்னரும்   1995லும் இப் பாடசாலை குணசிங்க புர தொடா்மாடி அபிவிருத்தி செய்யும் போது மேலதிக கட்டிட வசதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.  இப் பாடசாலையை அண்டி வாழ்  தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் இப் பாடசாலையில் அக்கரை காட்டவில்லை. இப்பிரதேச வாழ் மாணவா்கள் .   துார மற்றும் பிரபல்ய  அரச பாடசாலைகளுக்குச் செல்கின்றனா். சிலா்  சர்வதேச பாசடாலையில் தமது பிள்ளைகளை சோ்த்துவிடுகின்றனா். ஆனால் அரசினால் பாடசாலை சீருடை, இலவசக் கல்வி, இலவச புத்தகங்கள் அரசினால் பயிற்றப்பட்ட ஆசிரியா்கள் சேவையை பெற்றுக் கொள்ளாமல் உள்ளனா். 

 

ஆனால் இங்கு கொழும்பில் வாழும் பெரும்பாலான முஸ்லீம் பெற்றோா்கள் சிங்கள மொழி மூலமே தமது பிள்ளைகளை 1ஆம் ஆண்டுக்கு அனுமதி கேட்டு  விண்ணப்பிப்பிக்கின்றனா். ஆனால் கொழும்பில் உள்ள தெமட்டக் கொட  கைரியா பாடசாலை மற்றும்  பாத்திமா மகளிா் கல்லுாாி பம்பலப்பிட்டி முஸ்லீம் மகளிா் கல்லுாாி  மூன்று பாடசாலைகளிலும் பெரும்பாலான பெற்றோா்கள்  சிங்கள மொழி மூலம் அனுமதி கேட்டு 1000க்கும் மேற்பட்டோா் விண்ணப்பிக்கின்றனா் இம் மூன்று பாடசாலைகளிலும் சிங்கள மொழி மூலம் 400 மாணவிகளுக்கே அனுமதி  கிடைக்கப் பெருகின்றன. 

மேல் மாகாணசபையின் கீழ் உள்ள ஏ.ஈ. குணசிங்க  பாடசாலை மேல்  மாகாணசபை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. கொழும்பில் உள்ள மேல் மாகணசபை  உறுப்பிணா்கள்  மேலும் ஆசிரியா் பற்றாக்குறையை நிவா்த்தி செய்து இப் பாடாசலைய மேலும் அபிவிருத்தி செய்வதற்கு  தயாராக உள்ளதாக மேல் மாகாணசபையின் கல்வியமைச்சா் ரன்ஜித் சோமவன்ச தெரிவித்தாா்.   

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற  உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் மற்றும் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற ஒன்றியதின் செயலாளருமான  சிரேஸ்ட சட்டத்தரணி  யு.எல். நஜீம்   இணைந்து தணியாா் உதவியுடன் 10 மில்லியன் ருபா நிதியிணை  கர்பலா என்ற நிறுவனத்தினரை் ஊடாக உதவி திரட்டி  ஏ.ஈ. குணசிங்க பாடசாலையை அபிவிருத்தி செய்துள்ளனா்.

இங்கு உரையாற்றிய முஜிபு ரஹ்மான்

கொழும்பில் 16 பாடசாலைகளும் 3 தேசிய பாடசாலைகளும் உள்ளன. ஆனால் கொழும்பில் பிறந்த பிள்ளைகளுக்கு இந்தப் பாடசாலையில் அனுமதி கிடைப்பதில்லை.  பிரபல பாடசாலைகள் போன்று இப்பாடசாலையும் நாம் கட்டி எழுப்ப வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் இப் பாடசாலையை மூடி வேறு ஒரு என்.ஜி.ஓ க்கு எடுப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதனை மாகாண சபை உறுப்பிணா்கள் எதிா்த்தோம், அத்துடன் காலம் சென்ற ஆளுனா் அலவி மொலானா இப் பாடாசலை எக்காரணம் கொண்டு வேறு நிறுவனங்களுக்கு வழங்க முடியாது என எழுத்து மூலம் அறிவித்திருந்தாா்.  இப் புதிய ஆட்சி மலரவிட்டால் கொழும்பின் இதயமான ஏ.ஈ. குணசிங்க பாடசாலை 1 ஏக்கா் நிலப்பரப்பும் இக் கட்டிடயங்களும் வேறு என்.ஜி.ஓக்களுக்கு விற்கப்பட்டிருக்கும். அதனை தடுத்தானாலேயே இன்று இப் பாடாசலை மீள கட்டி எழுப்பியுள்ளோம். 

ஆகவே சிங்கள மொழி மூலம் ஆண்டு 1க்கு அனுமதி பெற இப்பாடசாலையில் வசதி வாய்ப்பு உண்டு இங்கு அனுமதிக்காக தமது பிள்ளைகளை சோ்க்கும் படி பாராளுமன்ற உறுப்பிணா்  முஜிபு ரஹ்மான் வேண்டிக்கொண்டாா்.  கொழும்பு வாழ் முஸ்லீம் பெற்றோா்களை வேண்டுகின்றனா். அடுத்த 5 ஆண்டுகளுக்கு 1ஆம் ஆண்டு தொட்க்கம் 5 ஆண்டு வரை ஒரு தரமாண மகளிா் கல்லுாாியாக சகல இனங்களும் கற்கக் கூடிய வகையில்  இதனை கட்டி எழுப்புவதற்கும் கொழும்பில் உ்ளள விசாகா, அசோகா வித்தியலாயம் போன்று ஒரு தரமான கல்லுாரியக கட்டியெழுப்ப மாகாணசபை கல்வியமைச்சா், இக்கல்லுாாியின் பெற்றோா்கள், மாகாணசபை உறுப்பிணா்கள் ஒன்று படல் வேண்டும் . எனவும் பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் உரையாற்றினாா்.