காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம் !

பழுலுல்லாஹ் பர்ஹான்
ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் நிதியுதவியின் கீழ் காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு சுமார் 4 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டி மற்றும் சக்கர நாற்காலிகள் என்பன வழங்கும் நிகழ்வு நேற்று 28 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
K-H-6_Fotor
இதன் போது மேற்படி குளிரூட்டி மற்றும் சக்கர நாற்காலிகள் என்பன மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி,உட்பட வைத்தியர்கள்,புத்திஜீவிகள்,ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
K-H-1 (1)_Fotor
இங்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வைத்தியசாலை நிலைமைகளை பார்வையிட்டதோடு வைத்தியசாலை எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
முக்கிய குறிப்பு: லங்கா ப்ரொண்ட் நியூஸ் இணைய தளத்துக்கு அனுப்பி வைக்கப்படும் செய்திகள் அனைத்துக்கும் அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிறர் மனதை புண் படுத்தும் செய்திகளுக்கு லங்கா ப்ரொண்ட் நியூஸ் பொறுப்பல்ல.
-நிருவாகம்-