ஏ.எஸ்.எம். ஜாவித்
நம் நாடு நற்பணிப் பேரவையின் தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்களின் ஏற்பாட்டில் தேசமான்ய அப்துல் கையூமின் தலைமையில் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் அருள் இசையரசு கலைக்கமலின் இரண்டாவது ஹிந்தி கீத்ராத் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) கொழும்பு-07 ஜே.ஆர். ஜெயவர்த்தன நிலையத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்விற்கு சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார் இதன்போது நம் நாடு நற்பணிப் பேரவையினால் மனிதகுல மாணிக்கங்கள் 14 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
கௌரவிக்கப்பட்டவர்கள்
01. ரி. ஈஸ்வரன் 02. தில்லை நடராஜா 03. கலாபூஷணம் கலைச் செல்வன் 04. கலைவாதி கலீல் 05. ஷெய்யத் ஓ மௌலானா 06. எஸ்.பி.சி. தாசிம் 07. வைத்தமானிநிதி 08. எஸ் அஹமட் 09. எஸ் சிராஜூடீன் 10. ஈ.எம்.ஹலீம் 11. எம்.எம்.எம். அப்துல் காதர் 12. முஹமட் சிஹான் ஹனிபா 13. டி.கே.எம். றிஸ்வி 14. ஜே. ஜலீல் ஆகியோர் பிரமுகர்களால் பொன்னாடை போர்த்தியும், மலர் மாலை அணுவித்தும், கிறீடமும் அணுவிக்கப்பட்டு சத்திய ஜோதி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது கலைக் கமலுடன் இணைந்து சிறந்த பாடகர்களான அமீர் கான், மொய்னா பேகம், நூர் ஜஹான் மர்சூக் ஆகியோர் கிந்தி கீதங்களை இசைத்தமை குறிப்பிடத்தக்கது.