மட்டு நகரில் 50 மில்லியன் ரூபா செலவில் புடைவை உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு !

பழுலுல்லாஹ் பர்ஹான்
rishad ameer ali acmc
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் 50 மில்லியன் ரூபா செலவில் இலங்கை புடவை மற்றும் ஆடை நிறுவகம் ,புடவைக் கைத்தொழில் திணைக்களம் என்பன இணைந்து கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு –ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலையம் நேற்று 28 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலையத்தை கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிஷாட் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் நிலையத்தின் பெயர்பலகை மற்றும் நினைவுக் கல்லை திரை நீக்கம் செய்து  உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தனர்.
3-DSC_Fotor
இந் நிலைய திறப்பு விழாவின் போது கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சினால் நடாத்தப்பட்ட ஆடை உற்பத்தி குடிசை கைத்தொழில் பயிற்சிகளை பூர்த்தி செய்ய 170 யுவதிகளுக்கும் அதிதிகளினால் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் அமைக்கப்பட்ட மேற்படி நிலைய திறப்பு விழாவில் புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ரொபட் பீரிஸ்,அதன் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் இளங்கோவன் உட்பட கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் அதிகாரிகள்,அமைச்சர்களின் இணைப்பாளர்கள் ,மதப் பெரியார்கள்,ஊர் மற்றும் அரசியல் பிரமுகர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.
DSC_3526_Fotor
கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பழைய வைத்தியசாலை வீதியில் பாலமுனை கடற்கரை பகுதிக்கு மிக அருகாமையில் 50 மில்லியன் ரூபா செலவில் நிறுவப்பட்டுள்ள புடைவை உற்பத்தி சம்பந்தமான பயிற்சியளித்தல் ,வடிவமைத்தல் மற்றும் சாயமிடல்; சேவைகள் நிலையத்தில் அதி நவீண இயந்திரங்களை பயன்படுத்தி புடைவை உற்பத்தி சம்பந்தமாக பயிற்சியளித்தல் ,புடவை வடிவமைத்தல்,புடவைக்கு சாயமிடல்; போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளதோடு சிறு கைத்தொழில் மற்றும் நெசவுக் கைத்தொழில்,குடிசைக் கைத்தொழில் உள்ளிட்ட உள்ளுர் உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கிலும் ,உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொருட்களை இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும் குறித்த நிலையம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7-DSC_3543_Fotor
DSC_3442_Fotor