முஸ்லிம் சமூகத்தினை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும் : YLS !

ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட்

 

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு ஐ நா மனித உரிமை ஆணையாளர் அல்- ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இவ்விஜயத்தின் நோக்கம் யுத்தத்திற்கு பின்னரான மீழ் குடியேற்றம், நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் போன்றவை தொடர்பாக ஆராய்ந்து ஐ நா மணித உரிமை பேரவைக்கு அறிக்கை சமர்பிப்பதாகும். சுருங்க கூறின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான விடயங்களையும் அவர்கள் தொடர்பான முன்னேற்றங்களையும் ஆராய்வதாகும்.

 

Untitled_Fotor

 

 வடக்கில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் 30 வருடங்களுகு முன் வெளியேற்றபட்டு அவர்களுடைய மீழ் குடியேற்றம் இன்னும் பாதிவழியில் நிற்கின்றது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களின் மீழ் குடியேற்றம் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்ட போதும் வட புல முஸ்லிம்களது நிலைமை இந்நாட்டில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன்தான் நோக்கப்படுகின்றது.  

இதற்கு காரணம் என்ன? இம் மீழ் குடியேற்றத்தினை வைத்து அரசியல் செய்கின்றவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? என்பது ஒரு புதிராகவே இருப்பது ஒரு புறமிருக்க  மனித உரிமை ஆணையாளர் ஹுசன் அவர்கள் இந்த நாட்டில் நான்கு நாட்கள் தங்கியிருந்து  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கும் விஜயம் செய்து பல தரப்பட்ட மக்களையும் சந்தித்த போதும் பாதிக்கப்பட்ட வட புல முஸ்லிம்களையோ அல்லது அவர்களது பிரதி நிதிகளையோ அல்லது முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களையோ  ஏன் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளிப்பது யார்?

ஐ நா ஆணையாளரின் இலங்கை விஜயத்திற்கான நிகழ்ச்சி நிரல் இலங்கை வெளிவிவகார அமைச்சினால்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இலங்கையில் உள்ள ஐ நா அலுவலகம் உறுதிபடுத்தியிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறாயின் வெளிவிவகார அமைச்சு வேண்டுமென்றே பாதிக்கப்பட்ட வடபுல முஸ்லிம்களை புறக்கணிப்பு செய்திருக்கின்றதா? அவ்வாவாறாயின் ஏன்? 

அவர்களுக்கு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் இருக்கின்றது என்பது தெரியாதா? அல்லது இந்த நாட்டில் முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்ல தேசிய தலைவர்கள் கூட இருகின்றார்கள் என்பதாவது புரியாதா?

வெளிவிவகார அமைச்சுக்கு இலங்கையில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இருப்பது தெரியாமல் இருக்காலாம். அல்லது முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் இருப்பதும் தெரியாமல் இருக்காலம். ஆனால் இத்தலைவர்களுக்கு இலங்கையில் ஒரு வெளிவிவகார அமைச்சு இருப்பது தெரியாதா? அல்லது வெளிநாட்டு பிரமுகர்கள் குறிப்பாக ஐநா பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற பொழுது அவர்களது நிகழ்ச்சி நிரலினை தயாரிப்பது வெளிவிவகார அமைச்சுத்தான் என்கின்ற நடைமுறையாது தெரியாதா? அல்லது ஆணையாளர் ஹுசைன் வரப்போகின்றார் என்ற விடயத்தையாவது முன்கூட்டியே அறிந்திருக்கவில்லையா ? ஏன் இவர்கள் உரிய காலத்தில் வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டு  ஆணையாளர் முஸ்லிம் தரப்பினருடனும் சந்திப்புக்களை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தவில்லை?

ஆனையாளரின் வருகைக்கு பத்து நாட்களுக்கு முன்புதான் முஸ்லிம் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் அவரை சந்த்திப்பதற்கான கோரிக்கையினை விடுத்ததாகவும் ஆனால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே  நிகழ்ச்சி நிரல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளதாக பதிலளிக்கப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நாட்டில் வாழுக்கின்ற மற்றுமொறு பிரதான சமூகம்தான் முஸ்லிம் சமூகமாகும். ஒரு சமூகத்தையே ஒதுக்கி விட்டு அவ்வாறான நிகழ்ச்சி நிரல் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்தால் அதனை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் கூட சக்தியற்ற அல்லது பெறுமதியற்ற தலைவர்கள்தானா நமது முஸ்லிம் கட்சி தலைவர்களும் தேசிய தலைவர்களும். நாம் ஏன் சிந்திக்க கூடாது?

கடந்த கால அனுபவங்கள் இருந்திருந்தால ஒரு மாத காலத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கையாக முஸ்லிம் தரப்பினரை சந்திப்பதற்கான நேர ஒழுங்கீட்டினை கோரியிருக்கலாம். அல்லது தயாரிகப்பட்ட நிகழ்ச்சி நிரலினை மாற்றி முஸ்லிம் தரப்பினருக்கு நேரம் வழங்குவதினை உறுதிப்படுத்தியிருக்கலாம்.

அவ்வாறு அவர்கள் மாற்ற உடன்படாமல் இருந்திருந்திருந்தால் அரச உயர் மட்டத்தில் அது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கலாம். ஆனால் எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருந்து கொண்டு “அநியாயம் நடந்தால் தட்டிக்கேட்க தயங்க மாட்டோம் ” என்று மட்டும் ஆவேச அறிக்கையினை விடுகின்ற அரசியல் தலைமைத்துவங்களைத்தான் முஸ்லிம் சமூதாயம் தமது எதிர்காலத்திற்காக நம்பியிருக்கின்றது.

சாதாரன சந்திப்பிற்கே நேரத்தினை பெற்றுக்கொள்ள முடியாத முஸ்லிம் தலைமைத்துவங்கள் முஸ்லிம் சமூதாயத்திற்கு விடுதலை பெற்றுத்தரும் என்று நம் சமூகம் இன்னு நம்புமானால் அன்று தந்தை செல்வநாயகம் ” தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறியதை போல் “இன்று முஸ்லிம் சமூகத்தை அல்லாஹ்தான் காப்பாற்ற வேண்டும்” என்று கூறுவதை தவிர வேறு வழியில்லை.