முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு போராளி ஒருவரின் அன்பான வேண்டுகோள்..!

 

40_Fotor

அஹமட் 

 

கெளரவ தலைவர் அவர்களே!!!!!

நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நீண்டகாலப் போராளி. மன்னார் எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவன். முன்னாள் பிரதியமைச்சர் சுந்தரமூர்த்தி அபூபக்கரின் காலத்திலிருந்தே மன்னார் மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன். இந்தக் கட்சியையும் உங்களையும் உளமார நேசிக்கின்றேன். இந்தக் கட்சியின் வளர்ச்சி கருதி, சில விடயங்களை உங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். 

தலைவர் அவர்களே,

தற்போது உங்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மான்னார் குவைதிர் கான் என்பவரின் உண்மையான சுயரூபம் உங்களுக்குத் தெரிய நியாயமில்லை. ஏனென்றால் கட்சியின் தலைவராகவும், அமைச்சராகவும் இருந்து பல்வேறு பொறுப்புகளை சுமந்துகொண்டிருக்கும் நீங்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரின் சுபாவங்கள் தொடர்பிலும் தேடிக்கொண்டிருக்க முடியாது. குவைதிர் கான் மன்னார் கீரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கீரி எனும் கிராமம் மன்னாரிலிருந்து சுமார் ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது. குவைதிர் கான் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கற்றவர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் இவர் சித்தி பெறாததால் படிப்புக்கு முழுக்குப் போட்டு வெட்டியாகத் திரிந்தவர். கபடத்தனமும், கள்ளத்தனமும் இவரின் இரத்தத்தில் ஊறியதினால், கள்ளக் கும்பல் ஒன்றின் தலைவரானார்.1986 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இன்னும் சிலருடன் இணைந்து மன்னார் பெரிய கடையில், சித்தி விநாயகர் நகை மாளிகையில் கொள்ளை அடித்தவர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாகனம் ஒன்றின் சில்லுக்குள் வைத்தே கொழும்புக்கு கொண்டுவந்தவர். அந்தக் கொள்ளையை பார்த்த ஒருவரை தீ வைத்துக் கொன்று விட்டு தாழ்வுபாட்டில் இரவோடிரவாக பிரேதத்தைக் கொண்டு போட்டவர். 

இவர் திருமணமாகி 15 நாட்களில் கொழும்பில் வைத்து பொலிசாரிடம் அகப்பட்டதனால் வெலிக்கடைச் சிறைச்சாலையில் சுமார் 06 மாதங்களாக இருந்தவர். பின்னர் நீர்கொழும்பு கொச்சிக் கடையில் கொள்ளை ஒன்றில் அகப்பட்டு சிறைக்கம்பி எண்ணியவர். இவர் ஒரு பயங்கரக் கள்ளன். சொந்தத் தொழில் எதுவுமில்லை. கொள்ளையும், ஏமாற்றிக் காசு பிடுங்குவதும்தான் இவரது பிழைப்பு. இனிமையாகக் கதைத்து மற்றவர்களை ஏமாற்றும் பலே கில்லாடி. சமூகத்துக்காக போராடுவதாக தத்துவங்கள் பேசுவார். இதனால்தானோ என்னவோ நீங்கள் கடந்த மாகாண சபைத் தேர்தலில் இவரை போட்டியிடச் செய்தீர்கள். ஆனால் இவர் எடுத்த வாக்குகள் ஆக 570 மட்டுமே.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதாக இலட்சக் கணக்கில் பணம் கறந்து, இடையில் மலேசியா, பேங்கொக் போன்ற நாடுகளில் அவர்களை அந்தரிக்க விட்டிடுவார். பேங்கொக்கிலும் சிறையில் இருந்த அனுபவம் இவருக்கு உண்டு. கொழும்பில் டிரவல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ரிஸ்வான் என்பவரிடம் ஏமாற்றிப் பெற்ற பத்து இலட்சம் தொடர்பான வழக்கு இன்னும் மாளிகாகந்தை நீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கின் இலக்கம் 42090. மார்ச் மாதம் 2 ஆம் திகதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது, என்பதை உங்கள் பணிவான கவனத்துக்கு கொண்டு வருகின்றேன்.   

எனவே, தலைவர் அவர்களே, இவ்வாறான ஒருவரின் சகவாசம் நமது கட்சிக்குத் தேவையே இல்லை. மர்ஹூம் அஷ்ரபின் காலத்தில், கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அகப்பட்ட போது அவரை கட்சியில் இருந்து இடை நிறுத்தி இருக்கின்றார். ஒருமுறை எருக்கலம்பிட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் கட்டுப்பாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மர்ஹூம் அஷ்ரப் பிரஸ்தாபித்தது எனக்கு இப்போது நினைவு வருகின்றது. இவ்வாறாக பலே கில்லாடி ஒருவரை கட்சியில் அரவணைத்து அவருக்கு புகலிடம் வழங்குவது ஆரோக்கியமானது அல்ல.