டொல்ஃபி என்ற கருவியின் வரவால் இனி வாஷிங் மெஷினுக்கு ஓய்வு !

 

fb-share02

டொல்ஃபி என்ற கருவியின் வரவால் இனி வாஷிங் மெஷினுக்கு (சலவை இயந்திரம்) வேலை இருக்கப் போவதில்லை.

சோப் அளவில் மிகச் சிறியதாகவும் கையடக்கமாகும் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருப்பதால் இந்தக் கருவி வாஷிங் மெஷினின் பாவனையைப் பின்னுக்குத் தள்ளி முன்னிலை பெற்றுவிடும் சாத்தியம் நிலவுகிறது.

டொல்ஃபி எனும் இக்கருவியானது அல்ட்ராசோனிக் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.

ஒரு வாளியில் தண்ணீர் விட்டு, சோப்புத் தூளைச் சேர்த்து, அழுக்குத் துணிகளைப் போட்டு விட வேண்டும்.

டொல்ஃபியை ஒன் செய்து வாளியில் வைத்து விட வேண்டும். டொல்ஃபியில் இருந்து சக்தி வாய்ந்த அல்ட்ராசோனிக் அலைகள் உருவாகி, குமிழ்களை ஏற்படுத்தும்.

அரை மணி நேரத்தில் துணிகளில் உள்ள அழுக்குகள் மாயமாகும்.

வாஷிங் மெஷினை விட துணிகளை மிக மென்மையாகக் கையாளும் டொல்ஃபி, பருத்தி, பட்டு, பாலியெஸ்டர் என்று எந்த வகையான துணிகளையும் சுத்தம் செய்து கொடுத்துவிடும்.

வாஷிங் மெஷினை விட 80 சதவிகிதம் குறைவான ஆற்றலில் டொல்ஃபி இயங்குவதால், சத்தமே வெளிவராது.

ஜெர்மனைச் சேர்ந்த தொழிலதிபர் லெனா சோலிஸ் இதை உருவாக்கியிருக்கின்றார்.

இனி வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் டொல்ஃபியைத் தூக்கிக்கொண்டு செல்ல மறக்க மாட்டார்கள்!