மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போது தமது அமைப்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பல சுற்றுப்பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
கோத்தபாய அரசியலில் முன்னிலையாக வரும் நிலையில் மஹிந்த ராஜபக்ச பின்னிலை அரசியலுக்கு செல்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கோத்தபாயவை அரசியலில் முன்னிலைப்படுத்தும் பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன.
இந்தநிலையில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது என்று மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் கோத்தபாய அரசியலில் ஈடுபடுவதற்கான முழுமையான இறுதி இணக்கத்தை இன்னும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.