738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு , 83 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளது – சி.வி !

 வடமாகாண சபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கான குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதி மூலம் 738 செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு 83 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டிள்ளார்.
c.v. vigneswaran

அதிகாரிகள் கவனயீனம் மற்றும் நிதி ஆணைக்குழு அனுமதியை உரிய காலத்திற்குள் வழங்காமை போன்ற காரணங்களினால் 2015ம் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஒதுக்கப்பட்ட செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு  செயற்றிட்டங்களுக்கு பயன்படுத்தி முடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். 

மாகாண கல்வி அமைச்சின் கல்வி நியதிச்சட்டம் அங்கீகரிப்பிற்கான விசேட அமர்வு நேற்று பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது. 

இதன்போது 28.12.2015 ம் திகதி வரையில் மாகாணசபைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2015ம் ஆண்டுக்கா ன நிதி ஒதுக்கீட்டின் செலவீட்டு தகவல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், 

கடந்த 2015ம் ஆண்டு குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி நன்கொடை நிதியில் அ மைச்சுக்கள் ரீதியாக செலவீடுகளை பார்க்கும் போது, விவசாய அமைச்சு 238 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செல வு செய்திருக்கின்றது. 

கல்வி அமைச்சு 217 வேலைத்திட்டங்கள் ஊடாக 73 வீ தமான நிதியை செலவு செய்திருக்கின்றது. 

சுகாதார அமைச்சு 107 வேலைத்திட்டங்கள் ஊடாக 78 வீதமான நிதியை செலவிட்டுள்ளது. மீன்பிடி அமைச்சு 145 வேலைத்திட்டங்கள் ஊடாக 98வீதமான நிதியை செலவிட்டிருக்கின்றது.